வியாழன், 28 ஜனவரி, 2010

தேர்தல் முடிவும் தமிழரின் முடிவும்

Posted on AM 10:21 by செல்வராஜா மதுரகன்



தேர்தலின் முடிவு அனைவர்க்கும் தெரிந்துவிட்டதால் நிறைய விளக்கம் தேவை இல்லை. ஆனான் தமிழரின் முடிவு பற்றி சிறிது கூறலாம் என்று ஆசைப்படுகிறேன். நேரம் பற்றாக்குறையாக இருப்பதால் சிறிதளவை இப்போது எழுதிவிட்டு எஞ்சியதை வார இறுதியில் எழுதுகிறேன். 
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 1842749 வாக்குகள் வித்தியாசத்தில் எதிரணிகளின் போது வேட்பாளர் ஜெனரல். சரத் பொன்சேகாவை தோற்கடித்துள்ளார். வரலாற்றில் இல்லாத அளவிற்கு 74.5  வீதமான மக்கள் (அதிகமாக பெரும்பான்மை இனத்தவர்) வாகளிதுள்ள இந்த தேர்தலில் மித அபாரமான ஒரு வெற்றியை மகிந்த பெற்றுள்ளார். எதிரணிகளின் ஒட்டு மொத்த அபிலாசைகளுடன் களத்தில் நின்ற பொன்சேகா பரிதாபமாக தோல்வி அடைந்துள்ளார். 


ஆனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் மகிந்தவை நிராகரித்து உள்ளமை சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரத்தை கண்டு அஞ்சாது எதிர்த்து வாக்களித்த அதனை மக்களின் நெஞ்சுரத்தைக் கண்டு வியந்து போயுள்ள அதே வேளை ஒட்டு மொத்த சிறுபான்மையினரும் ஒரு புறம் நிற்க, தமது வாக்குக்களை வீணாகி விட்டு தத்துவம் பேசிக்கொண்டு இருக்கும் இன்னொரு தரப்பினரை என்ன செய்வதென்று புரியவில்லை?? (குறிப்பாக யாழ் குடாநாட்டு மக்கள் ). யாழ் குடாநாட்டில் வெறும் 25 வீதமானோர்(185132 வாக்குகள்)  மட்டும் வாக்களித்துள்ள அதேவேளை அங்குள்ள இடம்பெயர்ந்து புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுள் 65  வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளமை வியக்க வைக்கிறது.   அதிலும் கிளிநொச்சி, தபால் மூல மற்றும் இடம்பெயர்ந்தோரை தவிர்த்து பார்க்கிறபோது மீதமுள்ள 674553 வாக்காளர்களுள் 158853 பேரே வாக்களித்து உள்ளனர் அதாவது 23.5 வீதமானோர். அங்குள்ள மொத்த வாக்காளருள் எத்தனை பேர் அங்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தாலும் பெரும்பாலானோர் வாக்களிக்க செல்லவில்லை என்ற உண்மையை மறுக்க முடியாது. 
வன்னி மாவட்டத்தை நோக்குகின்ற போது மொத்தமாக 40.33 வீத வாக்களிப்பு இடம்பெற்று இருந்தாலும் முல்லைத்தீவு, இடம்பெயர்ந்தோர் மற்றும் தபால் மூல வாக்குகளை விட்டு நோக்கும் போது தனியே மன்னர் மாவட்டத்தில் வெறும் 34 வீத வாக்குப்பதிவும் வவுனியா மாவட்டத்தில் 43.83 வீதமான வாக்குக்களும் இடப்பட்டுள்ளன இரு மாவட்டங்களிலும் இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம் பெயர்ந்தோர் தொகையை கணக்கில் எடுக்கும் போது 60  வீதத்திலும் அதிகமான வாக்குகள் இடப்பட்டு  இருப்பதாக கருத்திற் கொள்ள முடியும்.                  
ஏனைய மாவட்டங்களான திருகோணமலை-68வீதம், மட்டக்களப்பு-65வீதம் மற்றும் அம்பாறை-73வீதம் வாக்களித்து தமது உரிமையை நிலைநாட்டியுள்ளனர். எனது மனம் நிறைந்த வணக்கங்களை கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு தெரிவித்துக்கொண்டு தமிழரின் முடிவு பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன்... 
மதுரகன்    


No Response to "தேர்தல் முடிவும் தமிழரின் முடிவும்"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...