புதன், 24 பிப்ரவரி, 2010

சச்சின் 200 அம்மாமாமாமாமாமாமா....டியோவ்

Posted on பிற்பகல் 7:21 by செல்வராஜா மதுரகன்

வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடல் வரும் "கற்க கற்க" என்று அதிலே ஒரு வரி "கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல" என்பது அதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றது. அதாவது மனித இயலுமை எல்லையின் விளிம்பில் நின்று சாதனை படைக்கின்ற ஆற்றல் ஒரு சிலருக்கதான் வாய்க்கும். அவர்களில் ஒருவர்தான் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தம் சச்சின் சச்சின் சச்சின் ....    

36 வயதிலும் களைப்பே இன்றி சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல இன்று 200 ஓட்டங்களை ஒருநாள் போட்டியொன்றில் பெற்றுக்கொண்டுள்ளார். தென்னாபிரிக்க அணியுடனான இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் குவாலியரில் வைத்து அனைத்து பந்து வீச்சாளர்களையும் துவைத்து எடுத்ததன் மூலம் 147பந்துகளில் 200ஓட்டங்களை (25நான்குகள்,3ஆறுகள் அடங்கலாக)ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டுள்ளார். 

இதன் மூலம் "இவர் ஓய்வு பெறும்போது துடுப்பாட்ட சாதனைகளில் பெரும் பங்கு இவர் பக்கம் இருக்குமென்று இருபது வருடங்களுக்கு முன்னரே கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிய கருத்து மேலும் வலுப்பெற்றுள்ளது. அதை விட மறுபுறமாக இன்று தன்னுடைய 93ஆவது சர்வதேச சதத்தினை(ஒருநாள்-46, டெஸ்ட்-47 ) பூர்த்தி செய்துள்ள அவர் 100ஆவது சதத்தினை நோக்கி அடுத்த அடியையும் எடுத்து வைத்துள்ளார். 
எவராலும் நினைத்துப் பார்க்கவே கடினமான அல்லது கடந்த தசாப்தத்தினுள் ஒருசிலரால் மட்டுமே நெருங்க முடிந்த விடயமொன்றை சச்சின் இன்று சாதித்துள்ளார். கிரிக்கெட் உள்ளவரைக்கும் சச்சினின் புகழ் என்றும் நிலைத்திருப்பதை யாராலும் தடுக்க முடியாது. இந்த சாதனையை நான் பல்கலைக்கழக உணவுக்கூடத்தில் அமர்ந்து இருந்தது பார்த்துக்கொண்டிருந்த போது சூழ இருந்தவர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தவர்கள் மற்றும் இலங்கை அணி ரசிகர்கள் அவர்கள் அனைவரும் கை தட்டி மற்றும் மேசையில் தட்டி வாழ்த்தியபோது அது எனக்கு புரிந்தது விட்டது. 

சச்சினுக்கு நன்றிகள் இதுபோன்ற ஒரு அடியை பார்க்கிற சந்தர்ப்பம் தந்ததுக்கு!!
மதுரகன்     
   


6 Response to "சச்சின் 200 அம்மாமாமாமாமாமாமா....டியோவ்"

.
gravatar
தர்ஷன் Says....

என் வாழ்த்துக்களும் சச்சினுக்கும் பகிர்ந்த உங்களுக்கும்

.
gravatar
SShathiesh Says....

http://sshathiesh.blogspot.com/

சச்சினுக்கு வாழ்த்துக்கள். இதையும் கொஞ்சம் படிக்கலாமே.

.
gravatar
செல்வராஜா மதுரகன் Says....

நன்றி நண்பர்களே, அத்துடன் என்னுடைய தவறை சுட்டிக்காடிய நண்பருக்கும் நன்றி, இப்போது சரி செய்து விட்டேன்...

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...