ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கோவா - என்ன கொடுமை சார் இது ??

Posted on AM 1:28 by செல்வராஜா மதுரகன்










வெங்கட்பிரபு மற்றும் அவரது குழுவில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் படம் பார்க்கச் சென்றேன். ஏற்கனவே சென்னை600028 மற்றும் சரோஜா போன்ற படங்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன.  நீண்ட கனமான கதை ஒன்றிற்கு திரைக்கதை எழுதி திரைப்படமாக்குபவர்களின் மத்தியில் ஒரு சம்பவம் ஒன்றிற்கு விறுவிறுப்பான சுவாரசியமான திரைக்கதை ஒன்றை வழங்குவதன் மூலம் ரசிகர்களை வெற்றிகொள்ள முடியுமெனவும் காட்டியிருந்தார். 
கோவா படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இன் தயாரிப்பில் யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் வெங்கட் பிரபு எழுதி இயக்க வெளியானது. 

படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது. முக்கிய வேடங்களில் ஜெய், வைபவ், ப்றேம்ஜிஅமரன், அர்விந்த் ஆகாஷ், சம்பத், பியா, சினேகா மற்றும் ஒரு பெயர் தெரியாத ஆஸ்திரேலிய மாடல் அழகி ஆகியோர் நடித்து இருந்தனர். இதைவிட விஜயகுமார், சந்திரசேகர், ஆனந்தராஜ் வகையறாக்களும் ஆங்காங்கே ஊடுருவி இருந்தனர். பிரசன்னா இரண்டு இடங்களில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு போனார். கடைசிக்கட்டத்தில் திடுக்கிடும்படி மன்மதன் சிம்பு ஒரு இடத்திலும் புன்னகையை மட்டுமே பேசிக்கொண்டு நயன்தாரா ஒரு இடத்திலும் வந்து போறாங்கோ. 
படத்தில் எனக்கு பிடித்தவிடயங்கள் முதல் என்ற ஒழுங்கில் பிடிக்காத விடயங்கள் வரைக்கும் சொல்லிக்கொண்டு போகிறேன்.
இசை, 
யுவன் பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல... தொடர்ந்து வேட்டிகளை குவித்துக்கொண்டிருக்கும் யுவனின் வெற்றிப்பயணம் தடையின்றி தொடர்கின்றது. பாடல்களும் பின்னணி இசையும் அற்புதமாக இருக்கின்றது, எனக்கு கோவா என்று வரும் தீம் பாடலும், பண்ணைபுரம் பாடலும் பிடித்திருக்கிறது. இன்னொரு பாடல் அதை பிடித்திருக்கு என்று சாதாரணமாக கூற முடியவில்லை அந்த அளவிற்கு என்னை ஆட்கொண்டிருக்கிறது. இதுவரை என்ற பாடல் ஆயிரத்தில் ஒருத்தி அன்ட்ரியாவும் விஜய் சூப்பர் சிங்கர் அஜீஷும் இணைந்து பின்னிஎடுத்திருக்கிறார்கள்.








அஜீஷின் குரலின் இனிமை சில இடங்களில் மெய் சிலிர்க்க வைக்கிறது. இதே போல சூப்பர் சிங்கர் முதலாவது சுற்றின் வெற்றியாளரான நிஹில் மத்தியூவும் எனதுயிரே (பீமா) என்ற அருமையான பாடலைப் பாடிவிட்டு காணமல் போனது போன்று இவரும் போகாமல் இருக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.  

அடுத்து காட்சியமைப்பு - இடத்தெரிவுகள் அற்புதம், பண்ணைபுரத்தில் மெதுவாக ஆரம்பித்து கோவாவில் உச்சம் பெறுகிறது. கோவாவின் அழகை அணு அணுவாக காடியுள்ளனர் (கோவாவில் பருவமழை தொடங்கியதும் பாதி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்ததாக கேள்வி). மேலும் பார்ட்டி கலாச்சாரம் சூதாட்டம், காசினோ கிளப்பிங் போன்றன சில ஆங்கில படங்களின் வாசனையுடன் இடம்பெற்றாலும் சிறப்பாக இல்லாமல் இல்லை. "இதுவரை" பாடலின் காட்சியமைப்பும் அற்புதமாக உள்ளது. சக்தி சரவணனின் ஒளிப்பதிவிற்கு ஒரு கைதட்டல்.

நகைச்சுவை - பல இடங்களில் லொள்ளுதான் பண்ணுகிறார்கள். பழைய புதிய திரைப்படங்களையும் அவற்றின் நடிகர்களையும் கடி கடி என்று கடிக்கிறார்கள் அது சில இடங்களில் எல்லை கடந்துவிடுவதால் சிரிப்பு வராமலும் போகிறது. வெறும் நகைச்சுவைக்காக அர்விந்த் ஆகாஷ் மற்றும் சம்பத் ஆகியோரை Gay ஆக காட்டியிருப்பது சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் முகம் சுளிக்க வைக்கிறது. கூடவே சில இரட்டை அர்த்த வசனங்களும். மற்றபடி நகைச்சுவைக்கு குறைவில்லை ஏனென்றால் படத்தின் நோக்கமே அதுதானே.
நடிகர் நடிகையர் நடிப்பு, ஜெய் - பியா , பிரேம்ஜி - ஆஸ்திரேலிய பெண், வைபவ் - சினேகா என சொடியாகினாலும் வைபவ் சினேகா பிரிந்துவிடுகிறார்கள். ஜெய் இயல்பான நகைச்சுவையுடனும் தேவைப்படும் இடங்களில் உன்வரவு பூர்வமாகவும் நடித்திருக்கிறார்(இன்னும் முதிர்ச்சி தேவை), பியா அரைகுறை ஆடைகளுடன் கிளப் பாடகியாக வருகிறார்,நடிப்பால் கணிசமான அளவு தாகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

பிரேம்ஜிக்கு படத்தில் தேவைக்கதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல தெரிகிறது அடுத்த வெங்கட் பிரபு படத்திற்கு அவர் ஹீரோ ஆனாலும் ஆச்சரியம் இல்லை(எவ்வளவோ பண்ணியாச்சு இத பண்ண மாட்டமா). ஆஸ்திரேலிய மாடல் உடன் அவர் அடிக்கும் லூட்டிகள் சில இடங்களில் சிரிப்பையும் சில இடங்களில் கடுப்பையும் வரவழைக்கின்றன. ஆஸ்திரேலிய அழகி - சொல்வதற்கில்லை.

சினேகா - எவ்வளவோ கனமான வேடங்களில் எல்லாம் பார்த்த பிறகு இந்த எதிர்மறையான (negative) வேடத்தில் மனதில் பதிய மறுக்கிறார். முடிவில் மன்மதனால் பரிதாபமாக பலிக்கடா ஆகிறார். வைபவ் ஒரு கிராமத்து playboy போல வருகிறார்(எல்லாம் சும்மா பில்ட்டப் தான்). ஆனால் கடைசி வரை கண்ணுக்குள் நிற்கிறார் சின்னச்சின்ன வெளிப்பாடுகளை கூட முகத்தில் கண்ணில் அற்புதமாக பிரதிபலிக்கிறார். நிச்சயம் இவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு.

அர்விந்த் ஆகாஷ் சிக்ஸ் பக் உடம்புடன் அட்டகாசமாக வருகிறார். சம்பத்தும் அவரும் தமது கடமையை சரியாக செய்திருக்கிறார்கள் (சம்பத் இவர்தான சரோஜா வில்லன் என வியக்க வைக்கிறார்).

படத்தின் கதை - இதுவரை சரியாக எனக்கு ஒன்றும் புலப்படவில்லை என்ன சொல்ல வாறார்கள் என்று, ஆனால் இயக்குனரின் கூற்றுப்படி american pie, road trip போன்ற ஒரு Just for fun - nothing serious வகையறா முயற்சியாக கூறுகிறார். ஆனாலும் பல ஆங்கில படங்களின் பாதிப்புக்கள் இல்லாமல் இல்லை.

சுருக்கமாக பார்த்தால் ஊர்க்கட்டுப்பாடுகளை  கடந்து ஓரிரு நாட்கள் சுதந்திரமாக இருக்க மதுரை வரும் ஜெய், வைபவ், பிரேம்ஜி மூவரும் (ஏற்கனவே கட்டுப்பாடுகளை மீற முயன்று பஞ்சாயத்து தண்டனை பெற்றவர்கள்) ஜெய் இன் நண்பன் ஒருவன் கோவாவில் ஒரு வெள்ளைக்காரியை திருமணம் செய்து வெளிநாடு போவதைப் பார்த்து தாங்களும் அதுபோன்று செய்து வெளிநாடு போகும் எண்ணத்தோடு கோவா வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு அர்விந்த் மற்றும் சம்பத் உதவி கிடைக்கிறது. என்னவெல்லாமோ நடந்த பிறகு பிரேம்ஜி ஒரு வெள்ளைகாரியுடனும், ஜெய் பியாவுடனும், வைபவ் வெறுங்கையுடனும் ஊர் திரும்ப படம் முடிகிறது .
படம் ஓடுமா ஓடாத என்பது ரசிகர்களின் கையில் இருந்தாலும் சென்னை 600028 , சரோஜா இற்கு அடுத்த வரிசையில் கோவா ஒரு சரியான நகர்வாக படவில்லை. அடுத்து குடும்பத்துடன் பார்க்க முடியாத படங்களில் ஒன்றாக விமர்சிக்கப்படுவதும் நல்லதிற்கில்லை. (ஏற்கனவே வயது வந்தவர்களுக்கு மட்டும் என மாற்றப்பட்டு விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன)
சுபம்
மதுரகன் 
        




2 Response to "கோவா - என்ன கொடுமை சார் இது ??"

.
gravatar
Manoj (Statistics) Says....

தொடர்ந்து வேட்டிகளை குவித்துக்கொண்டிருக்கும்

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...