செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பெரிய தலைக்கும், தலைக்கும் ரெட் நோட்டீஸ்

Posted on PM 3:20 by செல்வராஜா மதுரகன்

தனக்கு வந்த பிரச்சினைகளால நொந்து போயிருந்த அஜித் திட்டம் போட்டோ போடாமலோ, சொல்லக்கூடாத இடத்தில வச்சு சொல்லக்கூடாத நபரிடம் சொல்லிவைத்தார். அதைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரஜினியும் இருக்கக்கூடாத இடத்தில இருக்கிறோம் என்பதையும் மறந்து எழுந்து நின்று கை தட்டி விட்டார். இப்ப அங்கங்க மாறி மாறி தட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அவரவர் வீடுகளை.
இந்த விடயம் தொடர்பான அஜித்துடைய வாதம் சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்க, இதனைத் தொடர்ந்தது நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தமிழ் சினிமாவுக்குள் அரசியல் தீவிரமாக ஊடுருவி உள்ளதை உணர்த்துகின்றது. அஜித் கூறிய கருத்துக்கள்   முழுமையாக ஏற்புடையவை இல்லை என்றாலும் மிரட்டல்கள் நடைபெறுவதற்கான  சாத்தியக்கூறுகள் உண்டு என்பதை தொடர்ந்து நடந்துள்ள சம்பவங்கள் நிரூபிக்கின்றன . அதைவிட திரைப்படத்துறையினருக்கு உள்ள சமூகபொறுப்பைக் காட்டிலும் அங்குள்ள சிலரின் சுய அரசியல் நலன்களுக்கான நாடகங்களே அவர்களின் பெரும்பாலான நகர்வுகளுக்கு  வழி தேடுவதும் தெரியாமல் இல்லை.
அத்துடன் அஜித்துடைய பேச்சுக்கு பல நடிகர்கள் பாராட்டு தெரிவித்திருப்பது, அனைவரும் இத்தகைய பிரச்சனைகளை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் வைத்திருந்ததைக் காட்டியுள்ளது. இதற்குப்பிறகு கருத்து மோதல் கல் வீச்சு என்று போய், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் அதாவது பெப்சி அஜித் மற்றும் ரஜினி படங்களுக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலையீட்டினால் இன்னமும் அந்தத் தீர்மானம் வெளியிடப்படாமல் உள்ளதாகவும் தெரிகிறது (வசூல் என்றாலே ரஜினிதான் அவருக்கே தடை என்றா சும்மா அதிருமில்ல).
இந்த களேபரங்களுக்கு இடையில் அஜித் தான் நடிப்பதை விட்டு விட்டு மீண்டும் கார் ரேஸ் இற்கே போவதாகவும் கூறி இருக்கிறார். இதெல்லாம் எங்கே போய் முடியப்போகின்றது என்பது புரியவில்லை. இவற்றை எல்லாம் ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் அந்த ஒருவருக்கும் தெரியுமோ என்னவோ.   

மதுரகன்
     


No Response to "பெரிய தலைக்கும், தலைக்கும் ரெட் நோட்டீஸ்"

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...