வியாழன், 25 பிப்ரவரி, 2010

சச்சின் - சில பொறாமையின் வெளிப்பாடுகள்

Posted on PM 5:38 by செல்வராஜா மதுரகன்

 வரலாறுகள் எத்தனையோ பேரை உருவாக்கி உள்ளன, எத்தனையோ பேர் வரலாற்றை உருவாக்கி உள்ளனர், ஆனால் சில பேர்தான் வரலாறு ஆகின்றனர் சச்சின் அத்தகைய ஒருவர், அவர் எடுத்துப்படிக்க வேண்டிய ஒரு வரலாறு. அத்தகைய ஒரு சாதனை நாயகன் நேற்று நடாத்திய மாபெரும் சாதனையை சிலர் கீழ்த்தரமாக விமர்சித்தால் அது பொறாமையின் வெளிப்பாடு அன்றி வேறொன்றில்லை.
என்னுடன் பேசிய எத்தனையோ பேர் இந்திய மைதானங்களில் இது என்ன இதற்கு மேலும் அடிக்கலாம் என்ற பாங்கிலும், 180 கள் வரை அடித்து ஆடிய அவர் அதற்குப்பின் மெதுவாக ஆடியதை விமர்சித்தும், இறுதியில் தோனிக்கு அதிக வாய்ப்பளித்ததற்கு காரணம் அவர் ஆட்டமிழந்து விடுவோமோ என்ற பயமே காரணம் என்றும் பலவாறு விமர்சித்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒன்று மட்டும் கூறிக்கொள்கிறேன், நேற்றைய நாளில் நிகழ்த்தப்பட்டது ஒன்றும் சுண்டக்காய் சாதனை அல்ல. அத்துடன் அதிக தடவைகள் அந்த சாதனையை நெருங்கி வந்து தவற விட்டவர் சச்சின் மட்டுமே. மீண்டும் ஒருமுறை கிடைத்த வாய்ப்பை அற்ப அடிகளுக்கு ஆசைப்பட்டு இழப்பதற்கு அவர் ஒன்றும் சாதரணமானவர் அல்ல, ஒரு கிரிக்கெட் மேதை.
அடுத்து இந்திய மைதானகளில் அடிக்க முடியுமென்றால் இதுவரை அங்கு எத்தனையோ நாடுகளின் எத்தனையோ வீரர்கள் விளையாடியுள்ளனர். அவர்கள் அடிக்கவில்லையே..? மேலும் இந்தச் சாதனை தகுதியான ஒருவரிடமே சென்றடைந்துள்ளது என்பதையும் தரமான அணி ஒன்றுடனே புரிந்துள்ளார் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், திறமையில் மட்டுமன்றி கிரிக்கெட் என்ற கனவான் விளையாட்டில் ஒரு கனவானாகவே 21வருடங்கள் நேர்மையாக வாழ்ந்து காடிய அவரை இத்தகைய குறுகிய விமர்சனங்களுக்குள் உட்படுத்தி விட முடியாது. 
மேலும் சச்சின் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை என்ற உண்மை நேற்று புலப்பட்டிருந்தது, தான் களைத்திருந்தமையை உணர்ந்தவுடன் தோனிக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கி அணியின் ஓட்ட எண்ணிக்கை அதிகரிப்பதையும் உறுதி செய்து கொண்டார். எனவே குறுகிய மனப்பாங்குடன் பார்க்காமல் கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி என்ற நோக்கில் இதைப்பார்க்க வேண்டும். 
இறுதியாக சச்சின் பேசும் பொது தன்னுடைய சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பித்து இருந்தார், ஆனால் நாடு மொழி கடந்த என்னைபோன்ற அவருடைய ரசிகர்கள் அனைவரையும் இதற்குள் உள்ளாகியிருந்தால் உலகெங்கும் உள்ள அவரது  கோடிக்கணக்கான ரசிகர்களும் மனம் நிறைந்து இருப்பர்.   
மதுரகன் 


11 Response to "சச்சின் - சில பொறாமையின் வெளிப்பாடுகள்"

.
gravatar
Nishanth Says....

21வருடங்கள் நேர்மையாக வாழ்ந்து காடிய அவரை இத்தகைய குறுகிய விமர்சனங்களுக்குள் உட்படுத்தி விட முடியாது./Suspended ban for Tendulkar over ball tampering
South Africa 362 & 233-5 dec India 201 & 28-1

By Tony Connelly in Port Elizabeth
Tuesday, 20 November 2001SHARE PRINTEMAILTEXT SIZE NORMALLARGEEXTRA LARGE
Sachin Tendulkar has been given a suspended one-match ban after being found guilty of ball-tampering, according to reports.

Sachin Tendulkar has been given a suspended one-match ban after being found guilty of ball-tampering, according to reports.

.
gravatar
தர்ஷன் Says....

முற்றிலும் உண்மை
குற்றம் சொல்லியே பேர் வாங்குவதென்பது இதுதானோ

.
gravatar
சாமக்கோடங்கி Says....

அருமை நண்பரே...

இத்தகைய குறுகிய மனப் பான்மை கொண்டவர்கள் மாற வேண்டும். நேற்று அவரால் எத்தனை மனங்கள் குளிர்ந்தன.. எத்தனை ரசிகர்களின் மனதில் பெருமிதம். எத்தனை குழந்தைகளின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர்.. வரவழைக்க முடியுமா இது போன்று பொறாமை பிடித்து அலையும் கயவர்களால்..? சூரியனை கைகளைக் கொண்டு மறைக்க நினைப்போர், அத்தகைய எண்ணத்தோடு வாழட்டும்..
நன்றி

.
gravatar
தங்க முகுந்தன் Says....

கவலையை விடுங்கள்! ஒரு பழமொழி உண்டு - காய்க்கிற மரத்துக்குத்தானே கல்லெறி அதுபோல இது தம்மால் முடியாததை ஒருவர் செய்துவிட்டால் முழுக்க முழுக்க அது பொறாமைதான்!
Take it easy!

.
gravatar
Unknown Says....

விடுங்க விடுங்க நண்பா...

சச்சின் இதையும் கடந்து போவார்.. :))

.
gravatar
செல்வராஜா மதுரகன் Says....

நன்றி நண்பர்களே,
@நிஷாந்த் நீங்கள் கூறியது சரிதான் ஆனால் அதே குற்றச்சாட்டில் சச்சின் பின்பு நிரபராதியாக இனம் காணப்பட்டதாக நினைவு, என்னிடம் அது தொடர்பான பத்திரிகை ஆக்கங்கள் இப்போதும் உள்ளன. ஒருமுறை பார்த்துவிட்டு சொல்கிறேன்

.
gravatar
priyamudanprabu Says....

செல்வராஜா மதுரகன் கூறியது...

நன்றி நண்பர்களே,
@நிஷாந்த் நீங்கள் கூறியது சரிதான் ஆனால் அதே குற்றச்சாட்டில் சச்சின் பின்பு நிரபராதியாக இனம் காணப்பட்டதாக நினைவு, என்னிடம் அது தொடர்பான பத்திரிகை ஆக்கங்கள் இப்போதும் உள்ளன. ஒருமுறை பார்த்துவிட்டு சொல்கிறேன்
///

aamaam
அவர் தவறு செய்யவில்லை என தீர்பானது

சும்ம குறை சொல்லும் கூட்டம் அப்படிதான் சொல்லும்

.
gravatar
டெக்‌ஷங்கர் @ TechShankar Says....

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...