ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

காந்தி - மண்டேலா - பொன்சேகா ??

Posted on PM 3:47 by செல்வராஜா மதுரகன்

ஓரிரு நாட்களுக்கு முன்னர் என்னை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு இது நேரம் கிடைக்காததால் சற்று தாமதமாக இன்று தருகிறேன். பொன்சேகா வேட்பு மனுவில் கையொப்பம் இட்ட அன்று அவரது மனைவி திருமதி. அனோமா பொன்சேகா ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார் அதிலே அவர் கூறியது என்னவென்றால், "இது ஒரு புரட்சிகரமான நிகழ்வு, இலங்கை வரலாற்றில் முதல் நிகழ்வாக கூட இருக்கலாம் எனது கணவர் சிறையிலே இருந்து வேட்பு மனுவிலே கையொப்பம் இட்டார், இதற்கு முன்னர் மகாத்மா காந்தி, நேரு, நெல்சன் மண்டேலா போன்றோருக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.
இங்கு அவர் போன்செகவுடன் ஒப்பிட எடுத்துக்கொண்ட நபர்களினைப் பார்த்ததுமே நான் திடுக்கிட்டு விட்டேன் அன்று இரவு கஷ்டப்பட்டுதான் தூக்கமே வந்தது. திருமதி. அனோமா அவர்களே நீங்கள் உங்கள் கணவருடன் ஒப்பிட வேறு ஆட்களே கிடைக்கவில்லையா. அகிம்சைக்கும் அமைதிக்கும் பெயர் பெற்று உலகத்தில் பலரால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் அவர்களை, கொடுமையான ஒரு யுத்தத்தை நடாத்தி பல்லாயிரக் கணக்கானோர் இறக்க காரணமாக இருந்த உங்கள் கணவர் பொன்சேகாவுடன் ஒப்பிட உங்களுக்கு மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது. உங்கள் அறியாமையை நினைத்து அனுதாபம் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. 

மதுரகன்     


6 Response to "காந்தி - மண்டேலா - பொன்சேகா ??"

.
gravatar
தர்ஷன் Says....

ஆஹா நானும் கேட்டேன். என்ன செய்வது இலங்கையில் அதுவும் தமிழனாய் பிறந்ததற்கு இதெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது.

.
gravatar
Unknown Says....

இந்தப் பதிவுக்கு மைனஸ் ஓட்டா.. அடப்பாவிகளா??

.
gravatar
Unknown Says....

இவர்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது..

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...