ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

காதலி

Posted on பிற்பகல் 11:11 by செல்வராஜா மதுரகன்

நான் உன்னை முதன்முறை பார்த்தேன்
உன்முகம் மொட்டுக்களுக்கு மலர்வதைக்
கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
சட்டென்று என் பக்கம் திரும்பினாய்
பூக்களால் கூட பரிசீலிக்கப்படாத நாணம்
உன்முகத்தில் தெரிந்தது...

நீ என்னை ஒருமுறை உற்று நோக்கியதுமே
என் அறையின் ஜன்னலோரப் பூந்தோட்டத்தில்
அதுவரை நிலைத்திருந்த கார்காலம் அகன்றது
என் மலர்வனங்கலெல்லாம் வசந்தகாலத்தை
சூடிக்கொண்டன...

அங்கு
உன்பார்வை ஒவ்வொருமுறை என்னைத்
தீண்டும்போதும் ஒவ்வொரு தளிர்களிலும்
மொட்டுக்கள் கருக்கொண்டன...
உன்சுவாசத்தின் வெம்மை என் இதயத்தை
குளிர்விக்கும் தருணங்களிலெல்லாம்
மகரந்தங்கள் சுகந்தம் பெற்றன...

உன் உதடுகளின் அசைவுகள் என்
உள்ளுணர்வுகளை உரக்கும் போதெல்லாம்
தென்றலில் இதம் கூடியது...
நீ முதன்முறை என்னைப்பார்த்து
புன்னகைத்தபோது என் தோட்டப்பூக்கள்
பூப்பெய்தின,... உன்னை நுகருவதற்காய்...

நான் உன் ஸ்பரிசங்களுக்காய் காத்துக்கிடந்தபோது
நீயும் நானும் மட்டுமே உள்ள
எம் உலகமே பனியால் உறைந்தது...
உன்னால் உயிர்பெற்றெழ....

மதுரகன் 


 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...