சனி, 20 மார்ச், 2010

கிரிக்கெட் தொடர் பதிவு

Posted on PM 6:15 by செல்வராஜா மதுரகன்

நேரப் பிரச்சனைகளால் தொடர்ந்து இழுபறி நிலையில் இருத்த கிரிக்கெட் பதிவை இன்று பதிவு செய்கிறேன் ஒருவாறு . 

அழைத்தவர் - சதீஷ் (சதீஷ் இன் கில்லி) 


விதி முறைகள்:


1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும். 
2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை 

3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்
(யாரை அழைப்பது என்ற குழப்பமும் தாமதத்திற்கு காரணம்)
கிரிக்கெட்டில் எனக்கு சர்வம் சச்சின் மயம் 
(1) பிடித்த போட்டிவகை :ஒருநாள்

     என்னைப் பொறுத்தவரையில் முழுமையான மற்றும் அளவான போட்டி முறை இதுவே, சிறப்பான தொடக்கம் பொறுமையான மைய ஓவர்கள் மற்றும் அதிரடி முடிவு என சீராக உள்ளது அத்துடன் டெஸ்ட் போட்டிக்கு அடுத்து வீரர்களின் முழுமையான திறமையை வெளிக்காட்ட கூடிய போட்டி வகை.  
(2) பிடிக்காத போட்டிவகை : T20 போட்டிகள்(பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் குறைவாக உள்ளதாக உணர்கிறேன் மேலும் ஓரிரு ஓவர்களே முடிவுகளை தீர்மானிகின்றன பொதுவாக அடுத்து மட்டை அடி அடிப்பவர்களும் ஏனோ தானோ என்று பந்து வீசுபவர்களும் பெயர் பெரும் இடம். மேலும் இனிப்பு அதிகரித்தால் தெவிட்டும் நிலை ஏற்படுமே எனக்கு இங்கு அதுதான் ஏற்படுகிறது)   
    டெஸ்ட் போட்டிகள். உண்மையில் சிறந்த ஒரு போட்டி வடிவம் தான் அதிரடி மட்டுமன்றி பூரணமான துடுப்பாட்ட திறமையும் சீரான தொடர்ந்த பந்து வீச்சும் மட்டுமே இங்கு எடுபடும் அதாவது உண்மையான திறமைக்கு சரியான அங்கீகாரம், ஆனால் 5 நாட்கள் அரக்க பறக்க விளையாடியும் ஒருவரும் வெற்றி பெறாவிட்டால் அது எல்லாம் ஒரு போட்டியா என்று தோன்றுகிறது .

(3) பிடித்த அணி : இந்தியா 
(4) பிடிக்காத அணி : எதுவுமில்லை. ஏனென்றால் எனக்கு இந்த பிடிக்காத விடயங்களை வைத்து அரசியல் செய்வது பிடிக்காது. எனக்கு இந்திய பிடிகிறதா இந்திய வென்றால் ரசிப்பேன் தோற்றாலும் ரசிப்பேன் ஏனென்றால் எனக்கு பிடிக்கிறது. இந்திய விளையாடாத தருணத்தில் இன்னொரு அணி தோற்கவேண்டுமென ஆசைப்படமாட்டேன். (ஏனோ தெரியவில்லை பல இலங்கை அணி ரசிகர்கள் இந்திய அணி கென்யாவுடன் விளையாடினால் கூட தோற்கவேண்டுமென ஆசை கொள்கிறார்கள்)

(5) பிடித்த துடுப்பாட்ட வீரர்கள் : ஒட்டு மொத்தமாக - சச்சின்
                                                         சச்சின் தவிர இந்தியாவில் - கபில் தேவ், கங்குலி, டிராவிட் 
                                                         மற்றைய அணிகளில் - சனத், Nathan Astle , Lara   
(6) பிடிக்காத துடுப்பாட்ட வீரர்கள் : Ricky Ponting (சச்சின் சாதனைகளை நெருங்கும் எண்ணத்தில் இருப்பதால்)

(7) பிடித்த விக்கட் காப்பாளர் : மார்க் பௌச்சர், டோனி   

(8) பிடிக்காத விக்கட் காப்பாளர் : நயன் மொங்கியா (ஏனோ தெரியாது இந்த ஆள் முகத்தை கண்டாலே ஏறுது 

(9) பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ் சிங், Andrew Symonds , நம்ம சச்சின்   

(10) பிடிக்காத களத்தடுப்பாளர் : முனாப் படேல் (பந்தை விட்டுட்டு அப்பாவியா சிரிப்பாரே அவர்தான்)

(11) பிடித்த வேகப் பந்து வீச்சாளர் : கபில் தேவ், மக் கிராத், பிரவீன் குமார் 
   
(12) பிடிக்காத வேகப் பந்து வீச்சாளர் : ஸ்ரீசாந்த் (இவர் அணியிலே உள்ள ஒரு ஜோக்கர் என்பது என் கருத்து)

(13) பிடித்த ஸ்பின்னர் : வேற யாரு கும்ப்ளே 

(16) பிடிக்காத ஸ்பின்னர் : அஜந்தா மென்டிஸ் (சத்தியமா அதுக்கு இவர் காரணமில்லை இவரை பெரிய ஆளாகிய ஊடகங்கள் தான் காரணம்)

(17) பிடித்த ஆடுகளங்கள் : உலகத்தில சச்சின் செஞ்சரி அடித்த எல்லா ஆடுகளங்களும். ஆனால் பந்து நன்றாக மேலெழும் ஆடுகளங்களில் பந்து சிறந்த பந்து வீச்சாளர்கள் அகப்பட்டால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

(18) பிடிக்காத ஆடுகளங்கள் : கீப்பர் காறித்துப்பினா கோச்சருக்கு சத்தம் கேட்கும் நியூசிலாந்து ஆடுகளங்கள்(இதுக்கு இன்டோர் கிரிக்கெட் வைக்கலாம் ). தம்புள்ளை(முரளியை நம்பியே உருவாகப் பட்ட ஒன்று)     

(19) பிடித்த சகலதுறை வீரர் : கபில் தேவ் , ரொபின் சிங்,  இர்பான் பதான், சனத்

(20) பிடிக்காத சகலதுறை வீரர் : ரொமேஷ் பவார் (இவரை நாங்கள் செல்லமாக தார் பீப்பா என்று அழைப்போம் உருவம் காரணமாக அவரின் ஹேர் ஸ்டைலும் திருவிழாவில் 20 ரூபாவிற்கு வாங்கிய சிவப்பு பிரேம் கண்ணாடியும் மறக்க முடியாதவை, யாவரை என் அணியில் வைத்திருக்கிறார்கள் என்று ஆராய்ந்து 2 எடுகோள்கள் எடுத்தோம் ஒன்று சரத் பவார் இவரது மாமாவாக இருக்கலாம் அல்லது திருஷ்டிக்காக இருக்கலாம்)
சகலதுறை வீரராம்..? 

(21)பிடித்த அணித் தலைவர் : இந்தியாவில் கேள்விப்பட்ட வகையில் கபில், பார்த்தவகையில் அசார்டீன், கங்குலி, டோனி 
மற்ற அணிகளில் Steve Waugh, Hanzy Cronje(எழுத்து சரி என்று நினைக்கிறேன் இவரை நினைவிருக்கா யாருக்கும்)  
நினைவிருக்கா? 
(22) பிடிக்காத அணித்தலைவர் : பொண்டிங், மஹேல, யூனிஸ் கான்
(23) கனவான் வீரர்கள் : சச்சின், டிராவிட் (இருவரிலும் முக்கிய ஒற்றுமை ஒரு பந்து வீச்சை எதிர் கொண்ட பின்னர் மறு புறம் திரும்பி விடுவார்கள் பந்து வீச்சாளர் என்ன சொல்கிறார் என்ற கவலை எல்லாம் படாது..)

(24) பிடித்த வர்ணனையாளர் : டோனி கிரேக், ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்த்ரி இவர்களை விட எதோ ஒரு போட்டியில் சங்ககாரவின் வர்ணனை கேட்டேன் பிடித்துக்கொண்டது    

(25) பிடிக்காத வர்ணனையாளர் : சேனல் ஐ இலே சகோதர மொழியில் அறிவிக்கும் எவருமே (எனக்கு அவ்வளவாக மொழி புரியாவிட்டாலும் அவர்கள் அறுவை என்பது புரியும்)

(26) பிடித்த பயிற்றுவிப்பாளர் : ஜான் ரைட், வாட்மோர்     



(27) பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல் (போடா டேய்...)

(28) பிடித்த போட்டி : பொதுவாக இந்திய விளையாடும் போட்டி மட்டும் தான் பார்ப்பேன் ஆகவே அனைத்துப் போட்டிகளும் பிடிக்கும். 

(29) பிடித்த வளரும் வீரர் : ரோஹித் ஷர்மா(இவரை வளர்த்தெடுக்க வேண்டும் எல்லா வகையான போட்டிகளிலும் அதன் தன்மை அறிந்து விளையாடும் ஆற்றல் உள்ள இந்த தலைமுறை வீரர்) 
 பிரவீன் குமார் - எனக்கு இவர் உத்தர பிரதேச அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகத்தான் அறிமுகமானார் சிறந்த ஒரு சகலதுறை வீரர் ஆகக்கூடிய ஆற்றல் இவரிடம் உண்டு என்பது என் கருத்து. 

(30) பிடிக்காத வளரும் வீரர் : பிரக்யன் ஓஜா (ஆரம்பத்திலேயே இவ்வளவு படம் கூடாது, கிட்டத்தட்ட இவரின் நிலையில் உள்ள அமித் மிஸ்ரா எவ்வளவு சாந்த மாக இருக்கிறார்.)



எல்லாம் என் எண்ணங்கள் விருப்பங்கள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும், 
அன்புடன் 
மதுரகன் 

நான் அழைப்பவர்கள் - எனக்கு பதிவுலக அறிமுகங்கள் குறைவு தெரிந்தவர்களில் இதுவரை தொடர் பதிவு இடாதவர்களை அழைக்கிறேன் 
ஸ்ரீதர்ஷன் - பதியவும் பகிரவும்   
கண்ணன் - Indian Tamil Cinema (சினிமாவைப் பற்றியே பதிவெழுதி பிரபலமாகி விட்ட நபர் பார்ப்போம் கிரிக்கெட் இற்கு என்ன சொல்கிறார் என்று)
ஹரன் - Harans


3 Response to "கிரிக்கெட் தொடர் பதிவு"

.
gravatar
Unknown Says....

நல்ல பகிர்வு.

//இலங்கை அணி ரசிகர்கள் இந்திய அணி கென்யாவுடன் விளையாடினால் கூட தொர்கவேண்டுமென ஆசை கொள்கிறார்கள்//

நானும் இதை கவனித்திருக்கிறேன்.

நான் வசிக்கும் (அமெரிக்காவில்) நகரில் எனக்குப் பல இலங்கை நண்பர்கள் உண்டு. அவர்கள் அனைவருமே இலங்கை அணியின் ரசிகர்கள். ஏனோ அவர்களுக்கு இந்திய அணி வெற்றி பெற்றாலே பிடிக்காது. அதே நேரம் இந்தியா தோல்வி அடைந்தால் என்னைப் பார்க்கும்போது உதட்டோரம் ஒரு ஏளனச் சிரிப்புடன், என்ன இண்டைக்கி இந்தியாக்கு என்ன ஆச்சு? என்று கேட்பார்கள்.

இலங்கை இந்தியாவில் டெஸ்ட், ஒரு நாள் தொடர் தோற்ற போது இவர்கள் என்னைப் பார்க்கும் போது கிரிக்கெட் பற்றி பேசக் கூட இல்லை, பங்களாதேஷில் முத்தரப்பு போட்டி இறுதி ஆட்டத்தில் இலங்கை வென்றது என்னை பார்த்து அதே கேள்வி..

ம்ஹ்ம்

.
gravatar
தர்ஷன் Says....

அழைப்புக்கு நன்றி
பதிவிட்டு விடலாம் பிரச்சினையில்லை ஆனால் ஒரு ரெண்டு நாள் அவகாசம் தாருங்கள்

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

//பிடிக்காத பயிற்றுவிப்பாளர் : கிரேக் சப்பல் (போடா டேய்...)//

சிரித்தேன். தொடர்ந்தமைக்கு நன்றி. இன்னும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...