வியாழன், 27 மே, 2010

பதிவுலகிலிருந்து திரையுலகிற்காக...



பதிவுலகம் அதற்குரிய அங்கீகாரத்துடன் அதற்குரிய பலத்தையும் சேர்த்தே கட்டி எழுப்பி வந்துள்ளது.. இந்த வகையில் இதன் ஒரு அடுத்த கட்டப் பயணமாக திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் பற்றிய சதீஷின் அறிவிப்பு எம்மை உற்சாகப் படுத்தி வழிப்படுத்துவதாய் உள்ளது. எனவே இந்த விடயத்தில் அவருடைய ஒவ்வொரு அடிக்கும் எனது சார்பில் மனதில் தெறித்த சாரல்கள் துணை நிற்கும் அதன் நேயர்களாகிய நீங்களும் துணை நிற்பீர்கள் என்று நம்புகிறேன்... 


அன்புடன்
மதுரகன் 

இது பற்றி சதீஷ் இன் வலைப்பூவில் வெளியான பதிவு - திரை உலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 - முன்னோட்டம்

சனி, 15 மே, 2010

விஜய்க்கு ஒரு உண்மை ரசிகனின் பகிரங்கக் கடிதம்! - Don't miss it...

ஆனந்த விகடனில் இருந்து பெற்று இணைக்கப் பட்டது....
விஜய்க்கு பகிரங்கக் கடிதம்!

அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு ,
நலமா?

50 படங்கள் முடித்திருப்பதற்கு முதல்ல வாழ்த்துக்கள். ரஜினி, கமல் என்னும் மாஸ் ப்ளஸ் க்ளாஸ் ஹீரோக்களின் இடத்தைப் பிடிப்பதற்கு முட்டிமோதுவோரில் நீங்கள் முதல் இடத்தில் இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் படங்கள் முதல் தரமானதாக இருக்கிறதா?

'நாளைய தீர்ப்பு' படத்தில் நீங்கள் அறிமுகமானபோது, இப்போதைய இந்த உயரத்தை நீங்கள் எட்டுவீர்கள் என்று யாரும் நினைத்தது இல்லை. உங்கள் வளர்ச்சிக்கு சினிமா துறையில் இருந்த உங்கள் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் காரணம் என்று சொல்வார்கள். அது ஆரம்ப காலத்தில் உண்மை. ஆனால், படிப்படியாக, நடனம், நடிப்பு, ஆக்ஷன் என்று கமர்ஷியல் ஹீரோவுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டு, கடுமையாக உழைத்துத்தான் இந்த உயரத்தை அடைந்திருக்கிறீர்கள். இன்றும் தமிழ் சினிமா ஹீரோக்களில் டான்ஸ் ஆடுவதில், 'உங்களை மிஞ்ச ஆள் இல்லை' என்பதை மற்ற ஹீரோக்களின் ரசிகர்களும் ஒப்புக்கொள்வார் கள். இதெல்லாம் உங்கள் உழைப்புக்குக் கிடைத்த பரிசுங்ணா!

'விஷ்ணு', 'ரசிகன்', 'கோயம்புத்தூர் மாப்ளே' போன்ற படங்கள் மக்கள் மத்தியில் உங்களைப்பற்றி உருவாக்கி வைத்திருந்த எண்ணங்களைச் சட்டென்று மாற்றிப்போட்டது 'பூவே உனக்காக'. நீங்கள் நடித்த 'காதலுக்கு மரியாதை' மக்கள் மத்தியில் உங்களுக்கு மரியாதையான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 'பிரியமுடன்' படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக சவாலான வேடத்தையும் சாதித்துக் காட்டினீர்கள். 'லவ் டுடே' படத்தில் பாசமுள்ள மகனாக மிரட்டி எடுத்தீர்கள். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி' போன்ற படங்கள் மூலம் பலதரப்பட்ட வயதினரும் உங்கள் ரசிகர்கள் ஆனார்கள்.

'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நீங்கள் பட்டையைக் கிளப்பிய காமெடியை இன்றும் சேனல்களில் பார்க்கும்போது சிரிப்பு பொத்துக்கொள்ளும். ஆனால், திடீரென்று 'பத்ரி' தொடங்கி 'புதிய கீதை' வரை தடம் மாறினீர்கள். தொடர் தோல்விகள். ஆனாலும், 'திருமலை' உங்கள் திருப்புமுனைதாங்ணா!

பல்லு விளக்குவதற்குக்கூட பஞ்ச் டயலாக் பேசுவது, காத்துல பறந்து கரணம் அடிப்பது, அம்புட்டுத்தான்... ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துவிட்டீர்கள்!

உங்கள் நினைப்பு சரிதான். நீங்கள் அடித்த 'கில்லி', நடித்த 'திருப்பாச்சி', வெடித்த 'சிவகாசி' எல்லாமே வசூலில் சாதனை படைத்தன. அதில் இருந்துதான் படம் ஹிட் அடிக்க 'பஞ்ச் டயலாக்கும், பான்பராக் ரவியுமே போதும்' என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இங்கு இருந்துதான் உங்களையும் அறியாமல் எங்களை ஏமாற்ற ஆரம்பித்தீர்கள். இந்த இடத்தில் 'கில்லி'யைப்பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அதில் ஆக்ஷன், காமெடி, காதல் எல்லாமே பக்காவாக இருந்தது. 'அப்படிப் போடு... போடு' என்று தமிழ்நாடே ஆடித் தீர்த்தது. அநேகமாக நீங்கள் நடித்து எல்லோருக்கும் பிடித்த கடைசிப் படம் என்ற அந்தஸ்து தற்போது வரை 'கில்லி' வசம்தான். கொஞ்சம் 'போக்கிரி'க்கும் கொடுக்கலாம்!



இடையில் 'குஷி'யில் செய்த குறும்பு இளைஞன் கேரக்டரை 'சச்சினி'ல் மீண்டும் கொண்டுவந்தீர்கள். ஆனால், அந்தப் படம் சுமாராக ஓடியதால் மீண்டும் பான்பராக் ரவியிடமே திரும்பிவிட்டீர்கள். இன்றைக்கு நீங்கள் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் வெற்றிகரமான ஹீரோ என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் நடிக்க வந்தபோதும், அதற்குப் பின்பும் வந்த விக்ரம், சூர்யா, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி என்று பலரும் வித்தியாசமான கதைகளில், வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துத் தங்கள் திறமையை நிரூபித்தனர். ஆனால், நீங்கள் குறைந்தபட்சம் ஹேர் ஸ்டைலைக்கூட மாற்ற ரெடியாக இல்லை. (சத்தியமாச் சொல்றேண்ணா... 'வேட்டைக்காரன்' போஸ்டருக்கும் 'சுறா' போஸ்டருக்கும் அனுஷ்கா, தமன்னாவை வைத்துத்தான் நான் வித்தியாசம் கண்டுபிடிக்கிறேன்!) இந்தப் பிடிவாதம் கெட்டப்பில் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், கதையைக்கூட மாற்ற மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படிங்ணா?

விஜய் படம் என்றாலே, சடை முடி வில்லன்கள், பஞ்ச் டயலாக், ஸ்லோ
மோஷனில் நடப்பது, பில்ட்-அப் கொடுப்பது என்று ஆகிவிட்டதே. உங்களைப்பற்றியும், உங்கள் படங்களைப்பற்றியும் கிண்டல் அடித்து எஸ்.எம்.எஸ்கள் கொட்டிக் குவிகின்றன என்பது உங்களுக்கும் தெரியும். சிறிது காலம் முன்பு வரை அந்த எஸ்.எம்.எஸ்களைப் படிக்கும்போது எனக்குக் கோபம் வரும். எரிச்சல் வரும். ஆனால், உங்களது சமீபத்திய படங்களைப் பார்க்கும்போது அந்த எஸ்.எம்.எஸ்-கள் உண்மையைத்தான் சொல்கின்றன என்றே தோன்றுகிறது. உங்க படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருந்தாலும், மத்தவங்க உங்களைத்தான் பெரிய வில்லன்னு சொல்றாங்க!

உங்கள் படம் எப்படி இருந்தாலும் முதல் நாளிலேயே முண்டியடித்துப் பார்க்கிற என்னை மாதிரி லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த மாஸ் ஓப்பனிங் எவ்வளவு பெரிய கிஃப்ட்ணா!

ஆனால், மாஸ் ஹீரோவாகிய நீங்கள் மணிரத்னம், ஷங்கர், பாலா, செல்வராகவன், முருகதாஸ், கௌதம்மேனன் போன்ற தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களின் பரிசீலனைப் பட்டியலில்கூட இல்லையே, ஏன்?



அண்ணா, நீங்கள் ரொம்ப சிம்பிள். அதற்காக உங்களின் கதையும் சிம்பிளாக இருக்க வேண்டுமா? நீங்கள் நடித்த கடைசி மூன்று படங்களில் இருந்தே அடுத்த படத்துக்கான கதையைத் தயார் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இதை நான் கிண்டலுக்குச் சொல்லலைண்ணா. உண்மையான வேதனை. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி கதையில் நடிங்க. நல்ல கருத்துக்களை, நல்ல ரசனையை மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். உங்களால் இதை நிச்சயமாகச் செய்ய முடியும்.

ஆரம்ப நாட்களில் 'உங்கள் விஜய்' என்று டைட்டிலில் போட்டுக்கொள்வீர்கள். ஆனால், நீங்கள் ஆக்ஷனில் வெடித்து பட்டையைக் கிளப்பத் தொடங்கிய 'இளைய தளபதி' அவதாரம் எடுத்த பிறகு, நீங்கள் 'எங்கள் விஜய்'யாக இல்லை. வருங்காலத்தில் தரமான படத்தில் நீங்கள் நடித்தால் நானும் 'விஜய் ரசிகன்' என்று சொல்லி 'போக்கிரி' தமிழ்போல காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வேன்.

கடைசியாக ஒரு உண்மை சொல்லட்டுமாண்ணா... தற்போதைய தமிழ் ஹீரோக்களில் காமெடி, டான்ஸ், ஆக்ஷன், சென்ட்டிமென்ட் எனக் கலந்து கட்டி கலகலக்கவைக்கும் பக்கா என்டர்டெயினர் நீங்கள் மட்டுமேதான். ஆனால், அந்த என்டர்டெயினர் சில காலமாகக் கண்ணில் தட்டுப்படுவது இல்லை. வி மிஸ் யூ விஜய்!

இப்படிக்கு ,
உங்கள் ரசிகன் 



...................................................................................................................................
எனக்கென்னவோ நியாயமான கோரிக்கைகள் போலதான் தெரியுது... 
இப்படிக்கு 
மதுரகன் 

வியாழன், 13 மே, 2010

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் இந்திய கேப்டன் நம்பிக்கை..


என்ன கொடுமை இது என்று கேட்டுடாதீங்கள். எனக்கு ஏனோ T20 பெரிதாக பிடிப்பதில்லை சச்சின் விளையாடுவதால் IPL பார்ப்பேன் மற்றபடி எதுவுமில்லை. ஆனாலும் வம்பு ஆசாமிகள் நான் இந்திய அணி ரசிகன் என்பதால் வம்பிளுப்பதால் இந்த பதிவு. இது பெண்கள் உலககிண்ணதைப் பற்றியது. அதில் இந்தியா அரையிறுதி போனது எத்தனை பேருக்கு தெரியுமோ என்னவோ. ஆனாலும் நல்லாத்தான் விளையாடியிருக்கிறார்கள் இந்திய நாட்டு பெண்மணிகள். 

இண்டைக்குத்தான் அந்த அறையிறுதியும் ஸ்கோர் எங்க பார்கிறது ஒரு மண்ணும் தெரியேல. அணித்தலைவி ஜுலன் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவிச்சிருக்கிரா. தாங்கள் வேல்லுவமேன்று. பார்ப்பம் என்ன நடக்குதென்று. முதல் சுற்று ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை மண் கவ்வச்செய்து அரையிறுதியில் நுழைந்து உள்ளனர். முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மூன்று போட்டிகளிலும் 129 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும் சுலக்ஷ்னா - 98, டயானா டேவிட் - 9 விக்கெட்டுகள் எடுத்து முன்னணியில் திகழ்கின்றனர்.  பார்ப்போம் இந்திய பெண்கள் அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுகிறதா என. 

மதுரகன் 

சனி, 8 மே, 2010

தொலைபேசிச் சாவுகள் உண்மையா ??



வதந்திகளை உருவாகுபவர்களிலும் பார்க்க அதை மற்றவர்களுக்கு பரிமாறுபவர்களும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுமே தண்டிக்கப் படவேண்டியவர்கள்

நேற்று இரவு 9 மணியளவில் உறவினர் ஒருவரிடமிருந்து அழைப்பு கைத்தொலைபேசிகள் மூலம் கதிர் வீச்சு தாக்கி பலர் இறந்ததாகவும் கொழும்பில் தானே பலர் பாதிக்கப் பட்டதாகவும் கேட்டார். பேசிவிட்டு அப்படி ஒன்றும் நடக்க முடியாதென்று. பின்னர் ஒரு 10.30 போல நண்பர்கள் அறைக்குப் போனால் அங்கு இது பற்றிப் பெரிய விவாதம் அதியுயர் அலைவீச்சு வருவது சாத்திய இல்லையா என்று. அதற்கிடையில் இது பற்றி ஒரு விழிப்புணர்வு மெசேஜ் வேறு. அதன் பிறகுதான் உணர்ந்தேன் இந்த செய்தி இலங்கை முழுவதையும் ஆட்கொண்டிருப்பதை. 
வதந்தியின் தீவிரம் எந்த அளவில் என்று அறிய இணையத்தில் தேடினால் இந்த செய்தி மாலை தீவையும் அதிர வைத்ததை உணர்ந்தேன். இன்னும் கொஞ்சம் தேட கூகுளே பெருமானின் துணையால் குட்டு வெளிப்பட்டது. 
இதே செய்தி ஏப்ரல் 13, 2007 இல் பாகிஸ்தானில் வெளியாகி பலத்த பரபரப்பை உண்டாகி உள்ளது. ஏப்ரல் 24 இலிருந்து 26 வரை கம்போடியாவை ஆட்டிப்படைத்துள்ளது. அங்கு இந்த வதந்தியை பரப்பியது யார் என்று போலீஸ் விசாரணையும் நடைபெற்று உள்ளது. பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடுகளில் இந்த செய்தி உலவியுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் மேலும் சில கிழக்காசிய நாடுகளில் உலவிய பின்னர். இப்போது ஒருவாறு இலங்கை வந்து சேர்ந்துள்ளது. என்ன கொடுமை என்றால் செத்தவர்களின் எண்ணிக்கை எல்லா இடமும் ஒரே அளவில் தான் கூறப்பட்டு உள்ளது. அதை மாற்றிக்கூட மெசேச் அனுப்ப நேரமில்லாத வதந்திக் காரரிடம் அகப்பட்டு விளித்ததை நினைத்தால் உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா ?
அதைவிட இப்படி ஒரு செய்தி உண்மையானால் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை உடனே தடை செய்ய இலங்கை கைத்தொலைபேசி ஸ்தாபனங்களால் முடியாதா. இதை விட மோசமான விடயம் சில ஊடகங்களும் இந்த வதந்தியைப் பரப்ப துணை போன சம்பவம்தான். ஊடகங்கள் விழிப்புணர்வு ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு மாபெரும் பீதியை மக்களிடம் விதித்துள்ளன. 

இதையும் பாருங்கள்.. 

மதுரகன் 
  

வெள்ளி, 7 மே, 2010

எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், விஜய் இது சரியா ?

தமிழ் சினிமா எங்கே போகிறது ??

சதீஷ் இன் சுறா விமர்சனத்தின் பதிலளிப்புகளில் ஒன்றிலோ அல்லது முகப்புதாக விவாதமொன்றிலோ அவர் கூறி இருந்தார் எம். ஜி . ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று eppothum தமிழ் சினிமா இரு அந்தக்களிலும் பயணித்தபடி இருப்பதாக(சற்று பொருள் மாறுபாடு இருப்பின் சதீஷ் மன்னிக்க) 
எனக்கு அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை.  அது பொதுவாக பார்த்தால் உண்மை போல இருக்கலாம் ஆனால் பொய். இவர்கள் வேறு பட்ட நாயகர்கள் உண்மை. சம காலத்தில் போட்டி இட்டவர்கள் உண்மை. ஆனால் எம்.ஜி.ஆர் முழுமையாக மசாலாவை நம்பி களமிறங்கினார் என்றால் பொய். அவரது பிற்காலம் அப்படித்தேரியலாம். அனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். நடிப்பிற்காக பாரதரத்னா விருதுகள் பெற்றவர். சாதாரண மசாலா நடிகர்களால் இவற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றால் என்ன அர்த்தம் அவரும் நடிப்புக்கு வேலை உள்ள நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  
அடுத்து ரஜினி என்றால் 90 க்கு பிறகு நடித்த படங்கள்தான் பலருக்கு நினைவுக்கு varum. ஆனால் 1975 இலிருந்து 1977 வரை அவர் ஏற்ற துணை வேடங்களும், பின்னர் 90 வரை பல படங்களில் ஏற்ற முதன்மை வேடங்களும் நினைவுக்கு வரவில்லையா. அந்தப் படங்களில் ஸ்டைலுக்கு கொஞ்சம் இடம் இருந்திருக்கலாம் ஆனான் பெரும்பாலான படங்கள் மசாலாவை நம்பி எடுக்கப் பட்டவை அல்ல கதையம்சம் நடிப்பு என சிறந்தது விளங்கிய படங்கள். ரஜினி கமல் இணைந்து நடித்த 17 படங்களை மறந்திட்டிங்களா. கேட்டா லிஸ்ட் பண்றேன் நடிப்பு கதையம்சத்தை முன்னிறுத்தி ரஜினி நடித்த படங்களை. அவரது 100 அவது படம் ராகவேந்திரா அது எடுக்கப் பட்ட நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
ஆனால் விஜயின் 50 அவது படம் சுறா பாரத்தின் 12 ஆவது படம் பழனி விஷாலின் 2 ஆவது படம் சண்டைக்கோழி இப்ப சொல்லுங்கோ தமிழ் சினிமா எங்க போகுது ரஜினி போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரே தன்னோட சினிமாட கடைசி 10-15  வருஷத்தை தான் மசாலாவில் தனியே செலவிட மசாலாவுடனே பிறக்கும் இன்றைய நாயகர்களை என்ன செய்ய ? ? 
இதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம் ஆனால் இது ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து. இது யாரையும் தாக்க எழுதவில்லை தவறான புரிந்துனர்வுகளைத் தவிர்க்க எழுதப்பட்டது. ஏனென்றால் இன்றைய முன்னணி நாயகர்களின் படங்களின் வெற்றிகள் அவர் ரசிகர்களால் தீர்மானிக்கப் படுவத்தில்லை ஏனென்றால் படம் எப்படி என்றாலும் நன்றாக இருப்பதாக கூறிக்கொண்டு 4-5 தடவைகள் பார்த்து விடுகிறார்கள். எனவே மற்ற ரசிகர்கள் நல்ல படம் என அமோதித்து பெருமளவில் வந்தால் படம் வெல்கிறது அல்லாவிடின் தோற்கிறது. (விதிவிலக்குகளும் உண்டு). நிறைவாக சமகாலத்தில் ஹீரோக்களாக இருந்தும் இன்றுவரை நட்புடன் பழகும் ரஜினி - கமலிடம் பாடம் கற்க வேண்டும் ஒரு படம் வென்ற உடனே முகத்தை சுழிக்கும் மற்றைய நடிகர்கள். 

இனி சும்மா சிரிப்புக்காக 

மதுரகன் 

ஞாயிறு, 2 மே, 2010

அம்மா அம்மா விஜய் கதை சொல்லு - சுறா

சொல்லப் பெருசா ஒண்டும் இல்லாததில சுருக்கமா சொல்லுறேன்...



யாழ் நகர் என்று ஒரு மீன்பிடி கிராமம், அங்க சுறா என்று ஒரு ஆள். யாழ் நகர்ல இருக்கிற 1400 குடும்பத்துக்கும் பிள்ளை மாதிரி, ஊருக்கும் ஒரு தலைவர் மாதிரி. அவருக்கு ஒரு கனவு, இலட்சியம் குப்பத்தில இருக்கிற வீடெல்லாம் வீசு எண்டு சொல்லகூடிய நிலையில இல்லாம ஓட்டை உடைசலா இருகிறதால எல்லாருக்கும் நல்ல வீடு கட்டிக்குடுத்திட்டுதான் கலியாணம் செய்வேன் என்று. அதை எப்பிடி செய்யபோறோம் என்று யோசிசுக்கொண்டும் மீனைப் பிடிச்சுக்கொண்டும் வலையைப்பின்னிகொண்டும்  சின்னச்சின்ன கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டும் இருக்கிறார் சுறா. 
இதற்கிடையில கிராமம் இருக்கிற இடத்தில VGP மாதிரி(இங்க உள்ள leisure world மாதிரி) ஒரு இடம் கட்டினா நல்ல வியாபாரம் நடக்குமென்டுற ஆசைல ஒரு மினிஸ்டர் என்னண்டு இவங்களை எல்லாம் எழுபலம் என்று யோசிக்கிறார். அதுக்கு தடையா வரலாம் என்று கருதப் படுற சுரவ மண்டைல தட்டிட்டு வீடெல்லாம் கொளுத்தி விடுறாங்கள். பிறகு ஒண்டுமே தெரியாத மாதிரி மினிஸ்டர் வந்து வேற இடத்தில நிலம் தாறன் விடு கட்ட காசு தாறன் அங்க போங்கோ என்றார். எல்லாரும் போக வெளிக்கிட அம்மன் சிலைக்கு கீழ விழுந்து கிடந்த சுறா எழும்பி வந்து வேண்டாம் இங்கே இருப்பம் என்றார். சரி என்று எல்லாரும் காசை திரும்ப குடுக்க. பிறகுதான் சுராக்கு தெரிஞ்சுது இதெல்லாம் மினிஸ்டர் வேளை என்று. மினிஸ்டர்ட்ட சவால் விட்டுட்டு அவர்ட கடத்தல் சாமானை கடத்தி வித்து காசு எடுத்து அவர் போட்ட தடை எல்லாம் நைசாக சமாளிச்சு 1400௦௦ குடும்பத்துக்கும் வீடு கட்டி குடுத்து சந்தோசமாக வாழ்ந்தார் சுறா. ஒரு விஷயம் மறந்திட்டேன் இடைல 2 - 3 பாட்டுக்கு ஆடின தமன்ன அக்காவையே கடைசியில கலியாணம் செய்தார்.     


இதில விமர்சிக்க வேறு ஒன்றும் இல்லை கதை பிடிச்சிருந்தா பாருங்கள். 

சனி, 1 மே, 2010

இரு கண்களும் சில சூரியன்களும் - பாகம் 1



சிலவேளைகளில் நானும் இந்த தென்றலும் அமைதியாக இருந்திருக்கக்கூடும்
உன்னைக்கண்டிராவிடின்...

அன்று சூரியன் மறைந்திருந்து ஒளிவீசியபோது எனக்குப்புரியவில்லை
யாரைக்கண்டு இந்த நாணம் என்று...
இந்த மேகக்கூட்டங்களெல்லாம் சிதறி ஓடியபோது நான் ஆச்சரியப்பட்டேன்
எந்தப்புயலுக்கு இந்த ஜீரணிக்க முடியாத அமைதியைப்பிடிக்கவில்லை...
எந்தக்காற்றுக்கு அஞ்சி இந்தவேகமான ஓட்டம்...





அந்த வழியால் உன்னைப்பார்த்தபோது புரிந்தது
இது ஒன்றும் பெரியவிடயமில்லை.......
ஆனால்..
நான் ஓட நினைத்தபோது என்கால்களும் ஓடின உன்னை நோக்கி...

அந்தச்சாலை நிச்சயமாகவே கொடுத்துவைத்தது...
அந்த தேவதையின் கால் தடங்களை அந்தவீதியில் கண்டுபிடித்தபின்
நான் ஏறத்தாழ காவலனாகவே மாறிவிட்டேன் அதற்கு...

என்னுடைய நாட்களின் பெரும்பங்கு இப்பொழுதெல்லாம்
காத்திருத்தலுடனேயே முடிந்து விடுகின்றது.
நான் அவளுக்காக காத்துக்கொண்டிருப்பேன்..
வீதி என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும்..நான் வானத்தைப்பார்த்து சிரித்துக்கொண்டிருப்பேன்...அந்த தெருவை கடந்து செல்பவர்களெல்லாம் என்னைக்கண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்...

காத்திருந்து அவள் வரத்தாமதமாகும் போதெல்லாம்
என் பேச்சுக்களெல்லாம் அந்த வீதிக்கே கிடைக்கும்..

அந்தச்சாலை என்னைப்பொறுத்தவரையில் ஓர் உயிருள்ள அங்கமாகிவிட்டது..




அன்று..
சூரியனும் சந்திரனும் புணர்ச்சியில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அந்திப்பொழுதில்
அந்தச்சாலையில் .. நீ வெட்கப்பட்டுக்கொண்டே
காய்ந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை
அழகாக மிதித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாய்...

நான் நின்று வான் பார்த்தேன்
நீ குனிந்து நிலம் பார்த்தாய்...

நீ தலைகவிழந்தபோது நட்சத்திரங்கள்
ஒளியிழந்து வாடிப்போயின
நீ தலை நிமிர்ந்தபோது நிலவு உன்னைப்பார்த்து தலைகுனிந்தது...

சூரியன் விலகிக்கொண்டான்

அவன் விட்டுச்சென்ற போர்வை என்மீது படிந்தது.
அந்தப்போர்வை விலகியபோது உன் முகம்
காணாமல் போயிருந்தது.

நான் மூர்ச்சையுற்றேன்.........


அன்று..
எந்தப்பெண்ணிடமோ அவமானப்பட்டதற்காய் வெட்கப்பட்டுக்கொண்டு
சூரியன் தன் முகத்தை மூடிக்கொண்டான்.
சூரியனைக்காணாத துயரில் வெண்மேகங்கள் முகம் கறுத்து அழுதுகொண்டிருந்தன..
அந்தச்சாலையின் ஓரத்தில் அந்த மரம் என்ன பாக்கியம் செய்தது....
அந்தப்பாவை அதற்குக்கீழே பாதி நனைந்தும் நனையாமலும்...
தன்னுடைய தாவணித்தலைப்பினால் தலையை மூடி
இரு கைகளையும் நெஞ்சுக்கு குறுக்கே அணைபோட்டவாறு...
வடிந்து செல்லும் நீரை கால்களால் எத்தி விளையாடியபடி,



அந்தக்காட்சிகளை கண்களால் பருகியபடி திரங்கி நிற்கும் நான்
என் கையிலிருந்த ஒற்றைக்குடைக்குள்
அவளையும் அழைத்துக்கொள்ளலாமா..? அழைத்தால் வருவாளா..?
வராவிட்டால் என்னால் தாங்க முடியுமா..?
சிந்தனையிலிருந்து தெளிவாகி அவளை அழைக்க எண்ணியபோது
மழை நின்று விட்டிருந்தது...
"ஏன் எனக்கு தூக்கம் வரும்போது மாத்திரம்
கனவுகள் காணாமல் போய்விடுகின்றன"

என்னுடைய உள்ளங்கால் வரை கூசியது.
தோல்வி ... வேறு வழியின்றி கிடந்து அழுகின்றேன்..
பாவம் என்னுடைய குடையின் விதி அன்று நிர்ணயிக்கப்பட்டது...


மீண்டும்...
மற்றொருமுறை...
கட்டிவைக்கப்பட்ட என்னுடைய சோகங்களை
அவிழ்த்துவிட்டது போல மழைபொழிகின்றது...
அந்த சாகரத்தில் நனைந்தவாறு
ஒரு வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறேன்...

திடீரென நீ அந்தச்சாலையில் நுழைகின்றாய்
மேகங்களால் சமுத்திரங்களுக்கு தூதுவிடப்பட்ட
அந்த நீர்த்துளிகளின் அன்றைய தூக்கத்தை
கெடுக்க விரும்பாததுபோலே நீ ஒரு குடையுடன் வந்துகொண்டிருக்கிறாய்...

நீ என்னை நெருங்க நெருங்க இதயம் படபடக்கின்றது குடைக்குள் வரச்சொல்வாயோ..?
இதற்காகத்தான் அன்றைய நாள் தவிர்க்கப்பட்டதோ...
எல்லா ஆதங்கங்களையும் மீறி நீ நேரே கடந்து செல்கிறாய்..
அந்தச்சாலையில் கிடந்து துடிக்கின்ற என் இதயத்தை மிதித்து உழக்கிவிட்டு...

எனக்கு தலை சுற்றியது.. உடனடியாக அவள் கண்பார்வையில் சந்தேகம் வந்தது.
இல்லை என தீர்மானித்தபோது என் மனம் மீண்டுமொருமுறை அதிர்ச்சியுற்றது...

என்னை ஏற்றுக்கொள்ளாத ஒரு பெண்ணுக்காகவா
என் இத்தனை பொழுதுகளும் கரைந்து போனது.. எது உண்மை....?
என் மூளைக்கு சிந்திக்கக்கூட அவகாசமில்லை

அப்படியானால் நீ எனக்காகவே பிறந்தவள் என்று
கூறும் போதெல்லாம் இந்த மரங்கள் தலையசைத்து
ஆமோதித்ததை பொய் என்கிறாயா.....

அவள் உனக்காகவே என இந்தச்சாலையின் மண் துகள்களெல்லாம்
என் நாசிக்குள் பொறித்தது பொய்யா...
உன்னைப்பின் தொடர்வதில் எனக்கும் சூரியனுக்கும் ஏற்பட்டபோட்டியில்
அந்த இருள் சூழ்ந்த வீதியில் சூரியன் ஒவ்வொருமுறையும் தோற்றது பொய்யா..



இடிந்து போய் நான் நடந்து சென்ற போது..
தனிமையில் தன்னுடன் இருக்கும் வேற்று ஆணுடன்
எச்சரிக்கையுடன் இருக்கும் பெண் போல
அந்தச்சாலையின் தரையும் என்னை பயிர்ப்புணர்வுடன் வேறுபடுத்தியது..

எம் காதலுக்கு மதிப்பளித்து இது வரை அந்த நடைபாதையை
கடக்கும் போது மாத்திரம் வாய்மூடிச்செல்லும் பறவைகள்
எல்லாம் இன்று அங்கு நின்று ஒலியெழுப்பிய போதுதான் உடலைச்சிலிர்த்துப்பார்த்தேன் ..
மழை நின்றுபோச்சு... மனசுக்குள்ளும்...?



தொடரும்...
 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...