வெள்ளி, 7 மே, 2010

எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், விஜய் இது சரியா ?

Posted on AM 12:54 by செல்வராஜா மதுரகன்

தமிழ் சினிமா எங்கே போகிறது ??

சதீஷ் இன் சுறா விமர்சனத்தின் பதிலளிப்புகளில் ஒன்றிலோ அல்லது முகப்புதாக விவாதமொன்றிலோ அவர் கூறி இருந்தார் எம். ஜி . ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்று eppothum தமிழ் சினிமா இரு அந்தக்களிலும் பயணித்தபடி இருப்பதாக(சற்று பொருள் மாறுபாடு இருப்பின் சதீஷ் மன்னிக்க) 
எனக்கு அந்த விடயத்தில் உடன்பாடு இல்லை.  அது பொதுவாக பார்த்தால் உண்மை போல இருக்கலாம் ஆனால் பொய். இவர்கள் வேறு பட்ட நாயகர்கள் உண்மை. சம காலத்தில் போட்டி இட்டவர்கள் உண்மை. ஆனால் எம்.ஜி.ஆர் முழுமையாக மசாலாவை நம்பி களமிறங்கினார் என்றால் பொய். அவரது பிற்காலம் அப்படித்தேரியலாம். அனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். நடிப்பிற்காக பாரதரத்னா விருதுகள் பெற்றவர். சாதாரண மசாலா நடிகர்களால் இவற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றால் என்ன அர்த்தம் அவரும் நடிப்புக்கு வேலை உள்ள நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  
அடுத்து ரஜினி என்றால் 90 க்கு பிறகு நடித்த படங்கள்தான் பலருக்கு நினைவுக்கு varum. ஆனால் 1975 இலிருந்து 1977 வரை அவர் ஏற்ற துணை வேடங்களும், பின்னர் 90 வரை பல படங்களில் ஏற்ற முதன்மை வேடங்களும் நினைவுக்கு வரவில்லையா. அந்தப் படங்களில் ஸ்டைலுக்கு கொஞ்சம் இடம் இருந்திருக்கலாம் ஆனான் பெரும்பாலான படங்கள் மசாலாவை நம்பி எடுக்கப் பட்டவை அல்ல கதையம்சம் நடிப்பு என சிறந்தது விளங்கிய படங்கள். ரஜினி கமல் இணைந்து நடித்த 17 படங்களை மறந்திட்டிங்களா. கேட்டா லிஸ்ட் பண்றேன் நடிப்பு கதையம்சத்தை முன்னிறுத்தி ரஜினி நடித்த படங்களை. அவரது 100 அவது படம் ராகவேந்திரா அது எடுக்கப் பட்ட நோக்கம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
ஆனால் விஜயின் 50 அவது படம் சுறா பாரத்தின் 12 ஆவது படம் பழனி விஷாலின் 2 ஆவது படம் சண்டைக்கோழி இப்ப சொல்லுங்கோ தமிழ் சினிமா எங்க போகுது ரஜினி போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரே தன்னோட சினிமாட கடைசி 10-15  வருஷத்தை தான் மசாலாவில் தனியே செலவிட மசாலாவுடனே பிறக்கும் இன்றைய நாயகர்களை என்ன செய்ய ? ? 
இதற்கு காரணம் யாராகவும் இருக்கலாம் ஆனால் இது ஆரோக்கியமானதல்ல என்பது என் கருத்து. இது யாரையும் தாக்க எழுதவில்லை தவறான புரிந்துனர்வுகளைத் தவிர்க்க எழுதப்பட்டது. ஏனென்றால் இன்றைய முன்னணி நாயகர்களின் படங்களின் வெற்றிகள் அவர் ரசிகர்களால் தீர்மானிக்கப் படுவத்தில்லை ஏனென்றால் படம் எப்படி என்றாலும் நன்றாக இருப்பதாக கூறிக்கொண்டு 4-5 தடவைகள் பார்த்து விடுகிறார்கள். எனவே மற்ற ரசிகர்கள் நல்ல படம் என அமோதித்து பெருமளவில் வந்தால் படம் வெல்கிறது அல்லாவிடின் தோற்கிறது. (விதிவிலக்குகளும் உண்டு). நிறைவாக சமகாலத்தில் ஹீரோக்களாக இருந்தும் இன்றுவரை நட்புடன் பழகும் ரஜினி - கமலிடம் பாடம் கற்க வேண்டும் ஒரு படம் வென்ற உடனே முகத்தை சுழிக்கும் மற்றைய நடிகர்கள். 

இனி சும்மா சிரிப்புக்காக 

மதுரகன் 


7 Response to "எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், விஜய் இது சரியா ?"

.
gravatar
கோவி.கண்ணன் Says....

//எம்.ஜி.ஆர் முழுமையாக மசாலாவை நம்பி களமிறங்கினார் என்றால் பொய். அவரது பிற்காலம் அப்படித்தேரியலாம். அனால் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். நடிப்பிற்காக பாரதரத்னா விருதுகள் பெற்றவர். சாதாரண மசாலா நடிகர்களால் இவற்றை நினைத்துக் கூட பார்க்க முடியாது. என்றால் என்ன அர்த்தம் அவரும் நடிப்புக்கு வேலை உள்ள நிறைய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். //

முதலில் மத்திய அரசு விருதுகள் எதுவும் திறமைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை, அவர்கள் யாருக்கு என்று சுட்டுகிறார்களோ அவர்களுக்கு தரப்படுகிறகிறது. சிவாஜி தேசிய விருது எதுவும் வாங்கவில்லை, அதனால் அவர் எம்ஜிஆரை விட திறமை குறைந்த நடிகர் என்றோ எம்ஜிஆர் சிவாஜியைவிட மிகவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார் என்றோ சொல்ல முடியாது.

மேலும் எம்ஜிஆருக்கான பாரத ரத்னா விருது அவர் முதல்வராக பணியாற்றி சிறப்பாக சேவை புரிந்ததற்காக கொடுக்கப்பட்டது நடிப்புக்காக கொடுக்கப்படவில்லை. உங்கள் கருத்து தகவல் பிழை.

உங்கள் கட்டுரையில் இந்த குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் தான் இந்த கருத்தை கூறுகிறேன்.

.
gravatar
தர்ஷன் Says....

உண்மை மதுரகன்
சதீஷை சொல்லிக் குற்றமில்லை ஆளாளுக்கு விஜயை வம்புக்கிழுப்பதால் அவர் இவ்வாறான ஒப்பீடுகளை செய்கிறார். தெரிந்து செய்கிறாரா? தெரியாமற் செய்கிறாரா? எனத் தெரியவில்லை நன்றாக எழுதக்கூடியவர்

.
gravatar
திவியரஞ்சினியன் Says....

தமிழ்த் திரை எப்படி இயங்குகின்றது, அது எப்பாதையில் பயணிக்கிறது என்பதைவிட துன்பகரமான விடயமாக, தமிழக இளைஞர்களை தமிழ்த் திரை எப்படியெல்லாம் மயக்கிவைத்துள்ளது என்பதையே கருதுகின்றேன். விஜயின் அண்மைய திரைப்படம் யாழில் வெளியிட்டபோது வாழைமரம் எல்லாம் கட்டி திரையரங்கு அலங்கரிக்கப்பட்டு அமர்களப்படுத்தப்பட்டதை எண்ணி தலைகுனிந்து நிற்க வேண்டியநிலை ஏற்பட்டது. தோழர்களும் தோழிகளும் சகோதர்களும் மூத்தோரும் இளையோரும் குழந்தைகளும் பெண்களும் என்று மரணதேவனால் வஞ்சிக்கப்பட்டிருக்க, விஜய்க்கு தீபதூப களியாட்டங்களை திருமணவீட்டு நிகழ்வாய் அரங்கேற்றிய இளைஞர்களை.........என்னென்று சொல்வது? தமிழக இளைஞர்களைத் தாண்டி இன்று நமது இளைஞர்களுக்கும் திரைப்பைத்தியம் தொற்றிவிட்டது எனலாம்! வேறு என்னத்தை சொல்ல?

தமிழ்த் திரைப்படங்களின் போக்கை நீரோ அன்றி நானோ எழுதுவதால் மாற்றமுடியாது. ஆனால் எமது கருத்தை இன்னொரு நான்குபேருக்கு கொண்டுபோய் சேர்த்தோம் என்றால், எழுத்தாளனாய் பெருமிதம் கொள்ளலாம். அந்தப் பெருமிதத்தை அடைய வாழ்த்துகள்.

.
gravatar
செல்வராஜா மதுரகன் Says....

@கோவி.கண்ணன் - பாரத ரத்னா கருது தவறென்பதை அறிந்தேன் அந்தத் தவறுக்கு மன்னிக்கவும். ஆனால் மற்றக் கருத்துக்களில் நான் உறுதியாக இருக்கிறேன் மீளப் பெற்றுக்கொள்ள முடியாது.
@தர்ஷன் - இது சதீஷை சாட எழுதப்படவில்லை எனக்கு இப்படி எழுத வேண்டுமென உதித்த இடம் அது அவ்வளவு தான். மற்றபடி அவர் ஒரு நடிகரை ரசிப்பதை நான் எவ்வாறு எதிர்க்க முடியும்.
@திவியரஞ்சினியன் - நன்றி உங்கள் ஆதரவிற்கு..

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

இந்தப்பதிவை எழுதும் பொது மதுரகன் அண்ணா என்னிடம் இதை பற்றி கூறிவிட்டுத்தான் எழுதினார் அவர் கருத்தை சொல்வதற்கு யாரும் தடையாக இருக்கமுடியாது.

அதாவது இருபெரும் நட்சத்திரங்களாக ஒருவர் நடிப்பையும் சோதனையையும் செய்ய மற்றவர் வணிக ரீதியான படங்களை கொடுத்தனர்.

அண்ணே விருதை வைத்து ஒரு முடிவு எடுக்க முடியாது. நான் கடவுள் படம் பாலாவுக்கு தேசிய விருது கொடுத்த படம் அந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதா? இல்லையே. எனவே விருதுகள் ஒரு கலைஞரை ஊக்கப்படுத்துமே ஒழிய அவற்றை வைத்து ஒருவரை கணிக்க முடியாது. பல சாதனையாளர்கள் விருதின்றியே இறந்துள்ளனர்.

ரஜினி நடித்த முரட்டுக்காளை படம் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு படம் என்று சொல்லப்படுகின்றது. அந்த படத்தின் மசாலா எப்படி என தெரியாதா அடுத்து. எம்.ஜி.ஆருக்கே சவால் போல ரஜினியின் ஒரு பாடல் இருக்கும் அப்போதே தன அரசியல் ஆசையை காட்டி இருப்பார். பாடல் நினைவில்லை முடிந்தால் தேடி சொல்கின்றேன்.

ஆரம்பத்திலேயே அதாவது எண்பதுகளிலேயே தன்னை பட்ரியாபாடும் பாடல்கள் வைத்திருக்கின்றார் ரஜினி உதாரணம் பில்லா (நாடுக்குள்ள எனக்கொரு ஊருண்டு) இது ரஜினி என்பவர் எம்.ஜி.ஆர் வழியில் பட்டையை கிளப்பினார் என்றே சொல்ல வருகின்றேன். வேறு அர்த்தம் அல்ல

அதேபோல ரஜினி அறிமுகமான காலகட்டம் வேறு அந்தகாலத்தில் ரஜினி ஒரு வித்தியாமான நடிகராக இனங்காணப்பட்டார். இவரின் ஸ்டைல் நடிப்பு அசால்டாக கதாபாத்திரங்களை சுபெறாய் செய்வது என்று அந்த காலகட்டத்துக்கு அது வித்தியாசமாய் இருந்தது. ஆனால் விஜய் அஜித் சிம்பு தனுஷ் பரத் விஷாலின் காலம் வேறு இந்த காலகட்டத்தில் முதல் நடித்த படங்களே ரீமேக் ஆகும் காலமாகி விட்டது. ஆக்ஷன் தான் முக்கியமாக இருக்கின்றது. அது அவர்கள் தப்பு மட்டுமல்ல ரசிகர்கள் நம் தப்பும். சுராவுக்கு வரிந்து கட்டிப் பார்த்த நாம் விமர்சனம் இட்ட நாம் அங்காடித்தெருவுக்கு இப்படி செய்யவில்லை. இது நம் தப்பு. அதேபோல நல்ல கதைகள் இல்லாமல் தவிப்பது இயக்குனர் பஞ்சம் ஷங்கர் கூட பிரமாண்டத்துக்கு முக்கியம் ம்கொடுக்கின்றாரே ஒழிய கதை இரண்டாம் பட்சம் தான் இது மாற வேண்டும்.

படம் வெல்லக்காரணம் ரசிகர்தான். படத்தின் உண்மையான வெற்றி விநியோகச்தருக்கும் தயாரிப்பல்ருக்குமே தெரியும். அவர்கள் திருப்திப்பட்டால் போதும்.

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

தர்ஷன் Says....
7 மே, 2010 4:18 pm
உண்மை மதுரகன்
சதீஷை சொல்லிக் குற்றமில்லை ஆளாளுக்கு விஜயை வம்புக்கிழுப்பதால் அவர் இவ்வாறான ஒப்பீடுகளை செய்கிறார். தெரிந்து செய்கிறாரா? தெரியாமற் செய்கிறாரா? எனத் தெரியவில்லை நன்றாக எழுதக்கூடியவர்//

அண்ணே நான் ஒப்பீடு செய்கின்றேன் என்பதை விட நான் சொல்வது என்னவென்றால் ரஜினி எப்படி தன சமகால நாயகர்களில் முன்னணி நாயகனோ அதேபோல விஜய் என்பதுதான் என் கருத்து ரஜினிக்கு அடுத்த தலைமுறையில் மற்ற நடிகர்களை விட வசூலில் ஏமாற்றதவரில் அவர்தான் முதலாவது. இது கசந்தாலும் உண்மை. நான் தெரியாமல் பேசவில்லை தெரிந்து தான் பேசுகின்றேன். தவறாக சொன்னால் சொல்லித்தாருங்கள் தெரிந்து கொள்கின்றேன். என் எழுத்தை பாராட்டியமைக்கு நன்றிகள்.

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

//தமிழ்த் திரை எப்படி இயங்குகின்றது, அது எப்பாதையில் பயணிக்கிறது என்பதைவிட துன்பகரமான விடயமாக, தமிழக இளைஞர்களை தமிழ்த் திரை எப்படியெல்லாம் மயக்கிவைத்துள்ளது என்பதையே கருதுகின்றேன். விஜயின் அண்மைய திரைப்படம் யாழில் வெளியிட்டபோது வாழைமரம் எல்லாம் கட்டி திரையரங்கு அலங்கரிக்கப்பட்டு அமர்களப்படுத்தப்பட்டதை எண்ணி தலைகுனிந்து நிற்க வேண்டியநிலை ஏற்பட்டது. தோழர்களும் தோழிகளும் சகோதர்களும் மூத்தோரும் இளையோரும் குழந்தைகளும் பெண்களும் என்று மரணதேவனால் வஞ்சிக்கப்பட்டிருக்க, விஜய்க்கு தீபதூப களியாட்டங்களை திருமணவீட்டு நிகழ்வாய் அரங்கேற்றிய இளைஞர்களை.........என்னென்று சொல்வது? தமிழக இளைஞர்களைத் தாண்டி இன்று நமது இளைஞர்களுக்கும் திரைப்பைத்தியம் தொற்றிவிட்டது எனலாம்! வேறு என்னத்தை சொல்ல//

வேதனையான விடயம் இப்படியான் முட்டல் வேலையை செய்யும் ரசிகன் அல்ல நான்.

 

வலைப்பதிவு காப்பகம்

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...