சனி, 8 மே, 2010

தொலைபேசிச் சாவுகள் உண்மையா ??

Posted on பிற்பகல் 1:03 by செல்வராஜா மதுரகன்வதந்திகளை உருவாகுபவர்களிலும் பார்க்க அதை மற்றவர்களுக்கு பரிமாறுபவர்களும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவர்களுமே தண்டிக்கப் படவேண்டியவர்கள்

நேற்று இரவு 9 மணியளவில் உறவினர் ஒருவரிடமிருந்து அழைப்பு கைத்தொலைபேசிகள் மூலம் கதிர் வீச்சு தாக்கி பலர் இறந்ததாகவும் கொழும்பில் தானே பலர் பாதிக்கப் பட்டதாகவும் கேட்டார். பேசிவிட்டு அப்படி ஒன்றும் நடக்க முடியாதென்று. பின்னர் ஒரு 10.30 போல நண்பர்கள் அறைக்குப் போனால் அங்கு இது பற்றிப் பெரிய விவாதம் அதியுயர் அலைவீச்சு வருவது சாத்திய இல்லையா என்று. அதற்கிடையில் இது பற்றி ஒரு விழிப்புணர்வு மெசேஜ் வேறு. அதன் பிறகுதான் உணர்ந்தேன் இந்த செய்தி இலங்கை முழுவதையும் ஆட்கொண்டிருப்பதை. 
வதந்தியின் தீவிரம் எந்த அளவில் என்று அறிய இணையத்தில் தேடினால் இந்த செய்தி மாலை தீவையும் அதிர வைத்ததை உணர்ந்தேன். இன்னும் கொஞ்சம் தேட கூகுளே பெருமானின் துணையால் குட்டு வெளிப்பட்டது. 
இதே செய்தி ஏப்ரல் 13, 2007 இல் பாகிஸ்தானில் வெளியாகி பலத்த பரபரப்பை உண்டாகி உள்ளது. ஏப்ரல் 24 இலிருந்து 26 வரை கம்போடியாவை ஆட்டிப்படைத்துள்ளது. அங்கு இந்த வதந்தியை பரப்பியது யார் என்று போலீஸ் விசாரணையும் நடைபெற்று உள்ளது. பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாடுகளில் இந்த செய்தி உலவியுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் மேலும் சில கிழக்காசிய நாடுகளில் உலவிய பின்னர். இப்போது ஒருவாறு இலங்கை வந்து சேர்ந்துள்ளது. என்ன கொடுமை என்றால் செத்தவர்களின் எண்ணிக்கை எல்லா இடமும் ஒரே அளவில் தான் கூறப்பட்டு உள்ளது. அதை மாற்றிக்கூட மெசேச் அனுப்ப நேரமில்லாத வதந்திக் காரரிடம் அகப்பட்டு விளித்ததை நினைத்தால் உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா ?
அதைவிட இப்படி ஒரு செய்தி உண்மையானால் குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை உடனே தடை செய்ய இலங்கை கைத்தொலைபேசி ஸ்தாபனங்களால் முடியாதா. இதை விட மோசமான விடயம் சில ஊடகங்களும் இந்த வதந்தியைப் பரப்ப துணை போன சம்பவம்தான். ஊடகங்கள் விழிப்புணர்வு ஊட்டுவதாக நினைத்துக்கொண்டு மாபெரும் பீதியை மக்களிடம் விதித்துள்ளன. 

இதையும் பாருங்கள்.. 

மதுரகன் 
  


2 Response to "தொலைபேசிச் சாவுகள் உண்மையா ??"

.
gravatar
Anand Says....

அட போங்க ... யாராவது சுறா படம் பாக்க கூட்டு இருப்பாங்க .. அதான் .. இந்த விளைவு

.
gravatar
SShathiesh-சதீஷ். Says....

தகவலுக்கு நன்றி அண்ணே. இதை பற்றிய முழுமையான விபரங்கள் என் தளத்தில் பரிமாறப்பட்டுள்ளன. முடிந்தால் படியுங்கள்.

http://sshathiesh.blogspot.com/2010/05/blog-post_08.html

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...