வியாழன், 13 மே, 2010

அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் இந்திய கேப்டன் நம்பிக்கை..

Posted on பிற்பகல் 11:49 by செல்வராஜா மதுரகன்


என்ன கொடுமை இது என்று கேட்டுடாதீங்கள். எனக்கு ஏனோ T20 பெரிதாக பிடிப்பதில்லை சச்சின் விளையாடுவதால் IPL பார்ப்பேன் மற்றபடி எதுவுமில்லை. ஆனாலும் வம்பு ஆசாமிகள் நான் இந்திய அணி ரசிகன் என்பதால் வம்பிளுப்பதால் இந்த பதிவு. இது பெண்கள் உலககிண்ணதைப் பற்றியது. அதில் இந்தியா அரையிறுதி போனது எத்தனை பேருக்கு தெரியுமோ என்னவோ. ஆனாலும் நல்லாத்தான் விளையாடியிருக்கிறார்கள் இந்திய நாட்டு பெண்மணிகள். 

இண்டைக்குத்தான் அந்த அறையிறுதியும் ஸ்கோர் எங்க பார்கிறது ஒரு மண்ணும் தெரியேல. அணித்தலைவி ஜுலன் கோஸ்வாமி நம்பிக்கை தெரிவிச்சிருக்கிரா. தாங்கள் வேல்லுவமேன்று. பார்ப்பம் என்ன நடக்குதென்று. முதல் சுற்று ஆட்டங்களில் நியூசிலாந்திடம் தோற்ற இந்திய அணி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை மண் கவ்வச்செய்து அரையிறுதியில் நுழைந்து உள்ளனர். முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மூன்று போட்டிகளிலும் 129 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும் சுலக்ஷ்னா - 98, டயானா டேவிட் - 9 விக்கெட்டுகள் எடுத்து முன்னணியில் திகழ்கின்றனர்.  பார்ப்போம் இந்திய பெண்கள் அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றுகிறதா என. 

மதுரகன் 


No Response to "அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம் இந்திய கேப்டன் நம்பிக்கை.."

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...