சனி, 31 ஜூலை, 2010

நாட்களுக்குப் பின்னால்

Posted on AM 12:44 by செல்வராஜா மதுரகன்

நகர மறுக்கின்ற நகரத்திலே இரவுகளுக்கும் கனவுகளுக்கும் மத்தியிலே சிக்கிக்கொண்டு நான் சில காலங்கள் பதிவுகளுடன் வருவதில்லை. மார்கழி மாதத்திலே அதிகாலையில் ஒவ்வொரு நாளும் பஜனைக் கோஷ்டி வரும் போது தை முதல் நாளை அறியாமல் கால்கள் படலையை தாண்டுவதில்லையா. பதிபவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் உறவு அப்படிதான் சிறிய இடைவெளி கூட நிறையப்பேரை இழக்க வைக்கும். 
கொஞ்சமாக எனக்கு கிடைத்த நேரங்களில் எனது சந்தோசத்துக்கும்  கவலைகளுக்கும் இடையான உணர்வுகளின் வெளிப்பாடுகள் தான் எனது எழுத்துக்கள். சினிமா விளையாட்டு பொழுதுபோக்கு சார்ந்தது, ஆனால் நிறைய வாசகர்களை அதுதான் எனக்கு கொடுத்தது. இது நன்மையா சாபம என்று புரியவில்லை ஆனால் சினிமா என்பது ஆசையை மோகத்தை தாண்டி போதையாக மாறிவிடுமோ என்று எனக்கு பயம் உள்ளது ஏனென்று தனிப்பப்பதிவில் சொல்லுகிறேன். 
அடுத்தது இடைவெளி கூடாது என்று தெரிந்தும் சிலவேளைகளில் தவிர்க்க முடிவதில்லை. இன்றுடன் ஜூலை முடிகிறது எனது ஒரே பதிவு இன்று இறுதி நாளில். ஜூன் மாத ஆரம்பத்தில் எனது பல்கலைக்கழக இந்து மன்றத்தின் கலைவிழா வேளைகளில் மூழ்கி விட்டிருந்தேன். நான்தான் தலைவன் என்பதான் பொறுப்புக்களும் மிகுதி. மிகச்சிறப்பாக நடந்த அந்தக் கலைவிழாவைப்பற்றிய பதிவொன்றும் விரைவில்.
கலைவிழாவில் ஒரு போஸ் 

முடித்து நிமிர பரீட்சைக்காலம் அதையும் கடந்து இன்றுதான் மூச்சு விட முடிகின்றது. முடிந்த வரை அல்ல எனக்கு பிடிக்கும் வரை எதாவது எனது வலைப்பூவிலே நீங்கள் பார்க்க அவ்வப்போது அல்லது அடிக்கடி பூத்துக்கொண்டிருக்கும்.
கடவுள் எனக்கு நிறைய தந்து இருக்கிறார், அந்த அளவிலே எனக்கு கடவுளில் பற்றுதல் அதிகம். நிறைய இன்பங்கள் அதை விட நிறைய துன்பங்கள், நிறைய வெற்றிகள் நிமிர்ந்து பார்க்க முடியாத தோல்விகள். இதையெல்லாம் விட இவற்றை இயல்பாக எடுத்துக்கொள்ள பக்குவம். இதை விட வேறு என்ன வேண்டும் வாழ்க்கைக்கு. என்றாலும் வாழ்கையில் சில பருவங்களில் சில வெற்றிகளும் சில பருவங்களில் சில தோல்விகள் என்னை அதிகம் பாதித்து விடுகின்றன. 
அப்படி ஒரு சம்பவம் கடந்த ஜூலை பதினேழாம் திகதி நடந்தது. என்னருகில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும் எனக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் மீது எவ்வளவு பற்றுதல் என்று. எனது மானசீக குருவாகவே நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தேன். எனக்கு மட்டுமல்ல நண்பனும் கவிதா உலகில் எனக்கு வழிகாட்டியுமாக இருக்கின்ற திலீபனுக்கும் (மாணவன் யாழ் மருத்துவபீடம்) அவர்தான் மானசீக குரு வழிகாட்டி எல்லாம். வைரமுத்துவா அப்துல் ரகுமான என்று நேரிலும் மூஞ்சிப்புத்தகத்திலும் பலருடன் மூர்க்கமாக சண்டை போட்டு இருக்கிறேன். அவரை வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்து கதைக்கவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் அவர் தலைமையில் கவியரங்கமே செய்யும் அற்புத வாய்ப்பை எமது பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. 
நான் கவிக்கோவுடன் மேடையில் 

இன்னும் எண்ணும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது, அந்தக் கவிதையை விரைவில் பதிவிடுகிறேன். இன்னமும் ஏதோ எழுத பதிய நினைக்கிறேன். ஓரிருவராவது என்னுடன் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில். 

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

மதுரகன் 


2 Response to "நாட்களுக்குப் பின்னால்"

.
gravatar
தங்க முகுந்தன் Says....

/கலைவிழாவில் ஒரு போஸ்/ - அந்தமாதிரி இருக்கு!

/கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கமே செய்யும் அற்புத வாய்ப்பை எமது பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது/

ம் பிறகென்ன! கொடுத்துவைத்தவர் நீர்! இப்படி ஒருவரை நாம் மனதால் நினைத்து - திடீரென அவரோடு அருகில் அமரும்போது ஏற்படும் அந்த அற்புதமான உணர்வுகளை சொல்லால் வடிக்க முடியாது!

உணர்வுகள் மீட்டிப்பார்க்க மட்டுமே முடியும்! நானிதை அனுபவித்தவன் என்பதால் ...

வாழ்த்துக்கள்!

கலைவிழாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாயுள்ளேன்!

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...