வியாழன், 19 ஆகஸ்ட், 2010

ஒரு நோபோலுக்கு சரிந்து போன ஓராயிரம் விக்கெட்டுகள்

Posted on AM 12:00 by செல்வராஜா மதுரகன்


இந்தப்பதிவு இந்த சந்தர்ப்பத்திலே எழுதப்படுவதால் இது தற்போதைய நிகழ்வுகளைப்பற்றி மட்டும் வந்த வெளிப்பாடு அல்ல நீண்ட நாளாய் எனக்குள் இருந்த கேள்வி. முன்பெல்லாம் ஆஸ்திரேலியா அணியிடம்தான் இந்தக்குணம் இருந்தது. அவரை இந்த சாதனையைப் படைப்பதிலிருந்து தடுக்க நாம் முயலுவோம் என்று அறிக்கை விடும் குணம் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பழக்கம் இலங்கை அணியையும் பற்றிக்கொண்டது. 
சமீபத்தில் முரளி எண்ணூறு விக்கெட்டுக்கள் எடுப்பதை தடுக்க முயல்வோம் என டோனி கூறிய போது அந்தப்பழக்கம் இன்று இந்திய அணியையும் பற்றி விட்டதையும் பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன். டெண்டுல்கர் டிராவிட் போன்ற கிரிக்கெட் கனாவன்கள் இருக்கும் அணியின் தலைவரா இப்படி அறிக்கை விடுவது என்று.
எனது கருத்து இதுதான் யாராக இருந்தாலும் இன்னொருவன் சாதனையைத் தடுக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது. ஒரு சாதனையாளரின் வாழ்விலே ஒவ்வொரு படியிலும் ஏற உதவி புரிந்த ஒருவன் இருந்தால் அவனுக்கு கூட ஒரு சாதனையைத் தடுக்க உரிமை இல்லை என்பது எனது கருத்து. சாதனை என்பது சாதாரண மனித இயலுமையைத் தாண்டிய ஒருவனது செயல். அது அனைவருக்கும் பெருமை அளிக்கக் கூடிய விடயம். முடிந்தால் அவனது சாதனையை முறியடித்து நீ இன்னொரு சாதனை படைக்க வேண்டும் அதை விட்டு விட்டு அவன் சாதனை செய்ய விட மாட்டோம் புடுங்குவோம் என்றால் அது மனிதத் தனமான செயல் அல்ல. அது டோனி என்றாலும் சரி சங்கா என்றாலும் சரி.

நிறைவாக இந்த சம்பவம் பற்றி வழக்கம் போல இலங்கை ரசிகர்கள் வக்காலத்து வாங்கிகொண்டும் இந்திய ரசிகர்கள் வசை பாடிக்கொண்டும் இருக்கின்றனர். நானும் எனது பங்கிற்கு facebookஇல் வசை பாடி விட்டேன். நடு நிலையாக யோசித்தால். இந்த இடத்திலே ரண்டிவ், ஷேவாக்கை அவுட் ஆக்க முயற்சித்து இருக்கலாம். அல்லது எஞ்சிய பந்துகளை ஓட்டம் எதுவும் கொடுக்காமல் வீசி முடித்து இருக்கலாம். அப்படி நடந்து இருந்தால் அது சவால் விடும் ஆட்டம். ஆனால் நோபோல் வீசியது ஒரு கோழைத்தனமான செயல்தான். அதை யாராளும் மறுக்க முடியாது. ஆனால் விதிப்படி இது தவறல்ல இதற்காக இரு ஆட்டத்தில் தடை விதித்து தனது கோமாளித்தனத்தை வெளிக்காட்டியுள்ளது இலங்கைக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை. 

மதுரகன்.


  


4 Response to "ஒரு நோபோலுக்கு சரிந்து போன ஓராயிரம் விக்கெட்டுகள்"

.
gravatar
Unknown Says....

//முரளி எண்ணூறு விக்கெட்டுக்கள் எடுப்பதை தடுக்க முயல்வோம் என டோனி கூறிய போது அந்தப்பழக்கம் இன்று இந்திய அணியையும் பற்றி விட்டதையும் பார்த்து மிகவும் வேதனைப்பட்டேன்//

இது எப்போன்னு தெரியலையே? தொடுப்பு இருந்தா குடுங்களேன்?

.
gravatar
பெயரில்லா Says....

இல‌ங்கை ர‌சிக‌ர்க‌ள்,நாட்டுப் பிர‌ச்ச‌னைக்கும் விளையாட்டுக்கும் முடிச்சுப்போறாங்க‌.
நாட்ல‌ பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்தா வேற‌ எதைப் ப‌ற்றியும் பேச‌க்கூடாதா.ஏன் ம‌ற்ற‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றி ப‌திவு போடுறாங்க‌.

ஜென்டில்மேன் ஆட்ட‌ம் அது இதுன்னுட்டு அழுகுனி ஆட்ட‌ம் ஆட‌லாமா.அது No Ballஇல்லை...no no No ball
விளையாட்டுன்னா ச‌ண்டை வ‌ர‌த்தான் செய்யும் அதைப் ப‌ற்றி பேச‌த்தான் செய்வார்க‌ள்.

"முரளி எண்ணூறு விக்கெட்டுக்கள் எடுப்பதை தடுக்க முயல்வோம்"

விட்டுகொடுத்து சாதித்தால் அது சாதைய‌ல்ல‌வே. ஆனால் அது நியாய‌மான‌த‌தாக‌ இருக்க‌வேண்டும்

.
gravatar
பெயரில்லா Says....

இல‌ங்கை ர‌சிக‌ர்க‌ள்,நாட்டுப் பிர‌ச்ச‌னைக்கும் விளையாட்டுக்கும் முடிச்சுப்போறாங்க‌.
நாட்ல‌ பிர‌ச்ச‌னை ந‌ட‌ந்தா வேற‌ எதைப் ப‌ற்றியும் பேச‌க்கூடாதா.ஏன் ம‌ற்ற‌ விஷ‌ய‌ங்க‌ளைப் ப‌ற்றி ப‌திவு போடுறாங்க‌.

ஜென்டில்மேன் ஆட்ட‌ம் அது இதுன்னுட்டு அழுகுனி ஆட்ட‌ம் ஆட‌லாமா.அது no ballஇல்லை...no no no ball
விளையாட்டுன்னா ச‌ண்டை வ‌ர‌த்தான் செய்யும் அதைப் ப‌ற்றி பேச‌த்தான் செய்வார்க‌ள்.

"முரளி எண்ணூறு விக்கெட்டுக்கள் எடுப்பதை தடுக்க முயல்வோம்"

விட்டுகொடுத்து சாதித்தால் அது சாதனைய‌ல்ல‌வே. ஆனால் அது நியாய‌மான‌தாக‌ இருக்க‌வேண்டும்

.
gravatar
Unknown Says....

இந்தியா தாங்க கிரிக்கட் ராஜா சொன்னா கேக்கணும்

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...