சனி, 8 ஜனவரி, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - குழப்பங்களும் சாட்டையடிகளும்

Posted on AM 12:19 by செல்வராஜா மதுரகன்

கொழும்பில் முதன்முறையாக நடந்துகொண்டிருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி குழப்பங்களும் பகிஷ்கரிக்குமாறு பலதரப்பட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதும் பலருக்கும் தெரிந்திருந்த விடயம் அறியாதோர் பின்வரும் இணைப்புக்களை படித்துப் பார்க்க. 
கீற்று - கீற்று இணையத்தளத்திற்கு சென்று அத்துடன் தொடர்புடைய இடுகைகளைப் பார்வையிட்டால் அவர்களுடைய நிலைப்பாடுபுரியும்.
மாற்றுப்பிரதி வலைப்பதிவு - விழாவாசலிலேயே எதிர்ப்புத் துண்டுப்பிரசுரம் வெளியிட்ட இவர்கள் கருத்துக்களைக் காண. 
அத்துடன் கீற்று ஊடாகவும் தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்கின் மூலம் நேரடியாகவும் மாநாட்டைப் பகிஷ்கரிகுமாறு குறிப்பாக சர்வதேச மற்றும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைக் கோரியவர் ஈழத்து மூத்த எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள். இவருடைய வாதங்களையும் கீற்று இணையத்தளத்தில் பார்க்கலாம். 
இவர்களுடைய கருத்துக்கள் உண்மையா? இல்லையா? என்பதைத் தவிர்த்து இவ்வாறு பலதரப்பட்டவர்களின் கூட்டு முயற்சிக்குப் பின் ஈழத்து அறிஞர்களால் இவர்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்டுள்ளதை விழா உணர்த்துகின்றது. அதை விட இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள 45 பேராளர்களும் இங்கிலாந்து, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜேர்மன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் வந்தவர்களும் கூற முயல்வது என்ன. 
நான் கேள்விப்பட்ட வரையில் ஈழத்து தமிழ்ப் பேரறிஞர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பங்கேற்ற சமீபத்திய விழாவாக இதைக் கூறலாம். அவர்கள் எதிர்ப்பாளிகளுக்கு கூற முயல்வது என்ன ? 
ஒரு மேற்காட்டுகைக்கு விழாவில் பங்கேற்கும் ஈழத்துப் பேராசிரியர்களின் பெயர்களை இங்கு தருகிறேன். இதற்கு மேல் எதிர்ப்பாளிகளுக்கு எப்படி முகத்தில் கரி பூச முடியும் என நீங்கள் எண்ணிப் பாருங்கள். 
பேராசிரியர். கா. சிவத்தம்பி
பேராசிரியர். அ. சண்முகதாஸ்
பேராசிரியர். எம். ஏ. நுஹ்மான்
பேராசிரியர். சி. மௌனகுரு
பேராசிரியர். சபா ஜெயராசா
பேராசிரியர். எஸ். சிவலிங்கராசா
பேராசிரியர். செ. யோகராசா
பேராசிரியர். மா. செல்வராஜா
பேராசிரியை. சித்திரலேகா மௌனகுரு
பேராசிரியை. அம்மன்கிளி முருகதாஸ்

இதைவிடப் பல கலாநிதிகள், விரிவுரையாளர்கள், எண்ணற்ற தமிழறிஞர்கள் என கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களில் ஈழத்துக்கலை இலக்கியதுறையை தோள்களில் சுமந்து சென்றவர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட அனைவரையும் அங்கே காணமுடிந்தது.அவர்களுடைய ஆற்றலுக்கும் தரத்திற்கும் உரிய ஒழுங்கமைப்புகள் காணப்படுகிறதா என்னும் ஐயம எனக்கு வந்தது. ஒழுங்கமைப்புகளில் நிறைய குறைபாடுகள் உள்ளது உண்மை. பேராசிரியர்களும் வரிசையில் நின்று அவர்களுக்குரிய சிட்டையைக் காண்பித்து உணவுப் பொதிகளைப் பெற்று வசதியற்ற மேசைகளில் இருந்து உண்டனர். எதற்காக அவர்கள் இத்தனை சிரமங்களைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். இவர்கள் அனைவரினதும் ஒன்றிணைவு கூறுவது என்ன.... சிந்தித்துப் பாருங்கள் தமிழ்நாட்டுக்கும் புலம்பெயர் தமிழர்களில் எதிர்க்கின்ற சிலருக்கும் சில உண்மைகள் புரியலாம். 
- எதிர்ப்புக்களை ஏற்று இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்கள் நிகழ்வைப் புறக்கணித்து இருந்தாலும் அந்த இழப்பைச் சமப்படுத்துகின்ற இலக்கிய ஆளுமைகள் எங்களிடத்திலேயே உண்டு என்று திடமாக காட்டியுள்ளனர். 
-என்ன தேவைக்கும் ஈழத்தின் பெயரைச்சொல்லி காரியம் சாதிக்கும் அளவிற்கு முட்டாள்கள் சிலர் தமிழ்நாட்டில் உள்ளதைப் புலப்படுத்துகின்றது.
-எப்போதும் தாங்கள் எடுக்கும் முடிவுகளை இலங்கையில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணும் சில புலம்பெயர் புதிர்கள் நல்ல சாட்டையடி மூலம் அவிழ்க்கப்பட்டுள்ளன.

இந்த மாநாடு உண்மையிலேயே எத்தகையது என்று என்னிடம் கேட்போருக்கு.. 
- எதிர்ப்பளிகளின் குரல்களைப் படியுங்கள் எதனால் எதிர்க்கிறான் என்ற கருத்திலேயே பலவிதமான பேதங்கள் உண்டு.. ?உள்முரண்பாடு 
- இதுவரை மாநாட்டில் இது அரச சார்பான விழா என்று எந்த இடத்திலும் ஐயம் வரவில்லை (காலி வீதியருகில் ஊர்வலத்திற்கு உதவி செய்யவந்த போக்குவரத்துப் போலீசார் தவிர)
- தமிழ்த் தேசியவாதம் பற்றிய எண்ணக்கருக்கள் சுதந்திரமாக வெளிப்படாமல் இல்லை
- நீங்களே வந்து மாநாட்டு அமர்வு ஒன்றில் அமர்ந்து பாருங்கள்.

நிறைவாக இது ஒரு குறிப்பிட்ட குழுவின் குழுநிலைச் செயற்பாடு என்று கூறியாவர்களே நீங்கள்தான் நிறைவில் ஒரு குழுவாக மீந்துள்ளீர்கள்
முத்தமிழ் முதுசம் எங்களிடத்திலேயே இருக்க யாரிடமும் எடுக்க வேண்டியதில்லை பிச்சை என்று காட்டிய இலங்கைத் தமிழிலக்கிய ஆளுமைகளே உங்களைப் பணிகிறேன்.
தடைகள் பலகடந்து மாநாட்டில் தடம் பதித்த தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் இலக்கிய ஆளுமைகளே பாராட்டுக்கள் உங்கள் துணிச்சலுக்கு...

எண்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..

தமிழன்

பிற்குறிப்பு - 1. மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
                        2. என் கருத்துக்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்
                        3. நான் கலந்து கொண்டதன் நோக்கம் தமிழார்வம் மட்டுமே


10 Response to "சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - குழப்பங்களும் சாட்டையடிகளும்"

.
gravatar
மு. மயூரன் Says....

நல்லதொரு அவதானம். பொறுப்பான கருத்துவெளிப்பாடு.

.
gravatar
செல்வராஜா மதுரகன் Says....

நன்றி மயூரன் அண்ணா.. என்னுடைய வலைப்பதிவுபற்றி உங்கள் தொடர்ச்சியான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

.
gravatar
வெண்காட்டான் Says....

இந்த சிவத்தம்பிதான் கருணாநிதியின் செம்மறி மகாநாட்டுக்கு பிலிம்காட்டி காட்டி போனவர். கருணாவோ ஜெயோ வேணும் என்றால் துரத்தவும் வரவேற்றாால் போகவும். என்ன மானம்கெட்ட பிழைப்பு.
தமிழ் தேசியகருத்துக்கள்... ஹி ஹி நல்ல பகிடி... சிறிலங்காவின் நிலையில தமிழ் தேசியம் கொழும்பில் பேசலாம் என்பது நகைப்புக்கிடமானது..
எஸ்.போ ஒன்றும் இந்த பேராசிரிககள் போல சந்தர்ப்பாவாத அரசியல் செய்பவர் இல்லை. ஒரு தரமான நியாயமான இலக்கியவாதி..
நிச்யமாக இந்த எழுத்தாளர் மகாநாடு ஏன் எதற்கு என்பது விளக்கமாக எனக்கு தெரியாவிட்டாலும்...
இதை ஆதரிப்பவர்களும் எதிர்கபவர்களும் வகைப்டுத்தினால் ஈழப்பபோராட்டதை மையமாக கொண்டு இயங்கும் 2 குழுக்களாக அமையும். என் என்று சிந்தித்தீர்களா? மது... உங்களை போன்ற இலக்கிய ஆர்கவலர்களி்ன மோகத்தில் நடக்கும் விபச்சாரமே இது. இதை தவிர்தவர்கள் ஈழ இன்னல்களுக்காக குரல் கெடுப்'பர்வாகள். அமைத்தவர்க்ள யார் என்பதை கவணியுங்கள். (இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் போன்றோர்)
மது..பொலிடிக்ஸ் என்று ஒன்று உண்டு..
இலக்கியத்திற்கு அப்பால் யார் யரர் பொலிடிக்ஸ் பண்ணுகிறார்கள் அவர்களின் பிண்புலம் என்ன எண்பதை பாருங்கள்.. நூலகம் நடத்தி பக்கசார்பாக நடக்கும் ஏல் படித்ததுவிட்டு இலக்கியம் கதைக்கும் மயூரனுக்கும் எனக்கும், உங்களுக்கும் இணையம் தான் உலகம். தமிழகத்திலும் ஈழத்திலம் அரசியல் புல நாய் வு செய்பவர்களு்கு இணையம் தெரியாது. நாங்களோ இதிலே பேசி இந்த உலகத்தில் மூழ்கிவிடுகிறோம்.

.
gravatar
வெண்காட்டான் Says....

சர்வதேச ஏழுத்தாளர் என்ற மகாநாடு ஏன் இந்த நேரத்தில்் சீறறிலங்காவில்? கொஞ்சம் சிந்தித்துபாருக்கள். மீண்டும கீற்றுவில் உள்ள அட்டவணையை பாருங்கள்.. யாார் யார் எப்படி பட்டவர்கள்் என்டு. சிவத்தம்பி யை அறிய வேண்டுமானால் அவர் காலத்ததில் பல்கலைகழகத்்தில் பணிபுரிதவர்களினம் கேளுங்கள் அவரின் பரந்த அறிவையும் சொல்வார்க்ள குறுகிய பொலிடிக்ஸ் பற்றியும் சொல்வார்கள்.

.
gravatar
baleno Says....

இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பாக நடப்பது அறிந்து மகிழ்ச்சி. தகவலுக்கு நன்றி

.
gravatar
தர்ஷன் Says....

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து ஒரு பதிவு. மாநாட்டை பகிஷ்கரிக்குமாறு தமிழ்நாட்டிலிருந்து கோரியோர்களின் நோக்கம் அரசியலே. இலங்கை தொடர்பிலான தெளிவின்மையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். எனினும் ரோசா வசந்த் போன்றோர் ஆரம்பத்தில் உக்கிரமாக எதிர்த்தாலும் பின்னர் தனது கருத்தை மாற்றிக்கொண்டனர்

.
gravatar
sharthaar Says....

மிக அருமையாக உங்களது கருத்துக்களை கூறியிருக்கின்றீர்கள் வரவேற்கின்றேன்...... இங்கே வருவதற்கு (வீணாக) பயப்படும் சிலர் நாங்கள் இல்லாமல் ஒரு இலக்கிய நிகழ்வா? நமது இலக்கிய இருப்பு என்னாவது என்ற ரீதியில் பொய்க்காரணங்கள் புனைந்து எதிர்ப்பை கிளப்பிப்பார்த்தார்கள்...... அவர்கள் "ஈகோ"விற்கு அழகாக கரி பூசியிருக்கின்றார்கள் நம்மவர்களும் கலந்து கொண்ட சர்வதேச எழுத்தாளர்களும்! வாழ்த்துக்கள்.

.
gravatar
Thanujan Says....

இந்தப் பேராசிரியர்களின் உரைகளைக் கேட்ட பின்னர் இக்கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தால் வரவேற்கின்றேன்.

.
gravatar
KANA VARO Says....

மூன்று நாளும் ஒழுங்காக நிகழ்வுகளை பார்க்கவில்லை. இன்று மாலை செல்வதாக உத்தேசம். வருவீர்களா?

.
gravatar
முனைவென்றி நா சுரேஷ்குமார் Says....

//-என்ன தேவைக்கும் ஈழத்தின் பெயரைச்சொல்லி காரியம் சாதிக்கும் அளவிற்கு முட்டாள்கள் சிலர் தமிழ்நாட்டில் உள்ளதைப் புலப்படுத்துகின்றது.

நூறு விழுக்காடு உண்மை.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...