ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

என்னை விட்டுடுங்கப்பா நான் ஒரு Srilanka Supporter

Posted on AM 3:55 by செல்வராஜா மதுரகன்

ஒரு இந்தியா டீமை சப்போர்ட் பண்ணிக்கொண்டு நான் படுற பாடு இருக்கே ஐயோ ஐயோ... என்ன கொடுமை இது எண்டுதான் கேக்க நினைக்கிறன்... பங்களாதேஷ் போட்டிக்கு முதல் ஒருத்தன் சொல்லுறான் இண்டைக்கு இந்தியா தோத்தா சுப்பர் மச்சான் எண்டு.. என்னடா இது இண்டைக்கு இந்தியா இருக்கிற நிலைல இப்பிடி சொல்றியே, பங்களாதேஷ் இட்ட தோக்குற மாதிரியா நிலைமை இருக்கு எண்டு கேட்டா... பிறகு வந்து அவங்களே சொல்றான்கள். பங்களாதேசை வெண்டா அது பெரிய விசயமா செத்த பாம்பை அடிச்சிட்டு இப்பிடி துள்ளாதை எண்டு..
இதிலை குறிப்பிட வேண்டிய விஷயம் 
ஒண்டு - பங்களாதேஷை வென்றதை பெரிய விசயமாக்கினது நான் இல்லை, அதுக்கு முதலே பங்களாதேஷ் வெல்லும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவங்கள். 
ரெண்டு - அப்பிடி வேண்ட பிறகு நான் எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடவில்லை... 
மூன்று - செத்த பாம்பு செத்த பாம்பு எண்டு சொல்றீங்களே அது செத்த பாம்பு எண்டு முதலே தெரிஞ்சும் எப்பிடி அது வெல்லும் என்று ஒரு கருத்தை சொன்னீங்கள்... ஆக பங்களாதேஷ் வெல்ல வேணும் எண்டு ஒரு நப்பாசை வேற அதுக்குள்ளே இந்தியா வென்றிட்டா செத்த பாம்பை அடிக்கிறாங்கள் என்று கூக்குரல்.. 

இதுக்குள்ளே இவங்கள் ஏதோ பெரிய பங்களாதேஷ் விசிறிகளோ பரம ரசிகர்களோ என்று பார்த்தா இல்லை... எல்லாம் சும்மா.. இண்டைக்கு பங்களாதேஷோட போட்டி எண்டதும் நான் பாக்க கூட போகேல.. இடைல எங்கயோ டிவி ரூம் பக்கம் போன பெரிய கூச்சல் கொண்டாட்டம்... இலங்கை போட்டி ஏதோ நடக்கு வடிவா போட்டி அட்டவணைய பார்க்காம விட்டிட்டன் என்று நினைச்சுக்கொண்டு கிட்ட போனாத்தான் அவங்கள் என் அவ்வளவு கூச்சல் போட்டாங்கள் எண்டு விளங்கிச்சு... சேவாக் 200 அடிக்காம அவுட் ஆகிட்டாராம். என்ன ஒரு அக்கறை... இதைத்தான் வக்கிரத்தின் உச்சம் என்பது. ஒரு Gentleman விளையாட்டை இவங்கள் போட்டு படுத்தும் பாடு.. 

சரி இலங்கைக்கு எதிரா விளையாடும் போது கொண்டாடட்டும்... ஆனா கென்யா கனடாக்கு எதிரா விளையாடும் போது கூட இந்தியா தோற்க ஆசைப்படுவது கேவலம் என்றுதான் சொல்ல தோன்றுது.. உனக்கெதுக்கு இந்தியா அணியில அவ்வளவு அக்கறை என்று யாரோ கேக்குறது விளங்குது கொஞ்சம் பொறுங்கோ எல்லாத்துக்கும் பதில் இருக்கு...
இதில சில பேர் வந்து இலங்கைல பிறந்திட்டு இந்தியாக்கு போய் ஆதரவு குடுக்கிறியே என்று ஆதங்கம்.. ஏதோ அவர் ஆதரவால்தான் போன உலகக்கிண்ணம் இறுதிவரை இலங்கை வந்தது மாதிரியும்.. நான் ஒருவன் அந்நிய அணிக்கு ஆதரவளித்த பாவத்தால் இறுதியில் தோற்றது மாதிரியும்..
அவங்களுக்காக இவ்வளவு துள்ளுறாய் அவங்கள் உன்னை என்னை தலையிலயா தூக்கி வச்சுகொண்டு ஆடுறாங்கள் என்று கேக்கும் சில பேர்.. என்னுடைய குறைந்த பட்ச ஆதரவுக்கே தலை மேல் தூக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நண்பர்களே... அப்படி என்றால் உங்கள் வெறித்தனமான ஆதரவுக்கு உங்களை இலங்கை அணி விளம்பரத்தூதராக அல்லவா நியமிக்க வேண்டும்.. குறைந்த பட்சம் என்ன கிடைத்தது உங்களுக்கு...
இதுக்குள்ள கிரிக்கெட் அணிக்கு ஆதரவு அளித்து தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த போவதாக சிலர்... இவர்களை எல்லாம் பார்க்கும் போது சிரிப்புத்தான் வரும்.... இலங்கையோ இந்தியாவோ.. தேசியக்கொடியின் பொருண்மை விளங்காமல் அதை ஏதோ தலைக்குமேல் சுழற்றும் வர்ணத்துண்டாக கருதிகொண்டதும்.. வெறும் தேசியக்கொடியை சுழற்றுவது தேசப்பற்று என நினைப்பதும்... வெறும் கிரிக்கெட்டுக்குள் தேசப்பற்றை அடக்கி என்ன சாதிக்கப்போகிறீர்கள்...
இன்னும் என்ன என்னவோ கேட்க நினைத்தாலும் மறந்து விட்டது,,,
இந்த ஆதரவு அரசியலால் மோசமாக பாதிக்கப்பட்டவன் நான்.. வெளிப்படையாக இந்திய அணியை ரசிப்பதால் தீவிரவாதி, தேசத்துரோகி என பெரும்பான்மை நண்பர்கள் சிலரால் விளிக்கப்பட்டவன்..
ஆனால் இது ஒரு பொழுதுபோக்கு என்று பலர் எண்ண மறுப்பது ஏன்.. ஒருவனுக்கு பாட்டு கேட்பது பொழுதுபோக்கு மற்றவனுக்கு பாட்டு அறவே பிடிக்காது என்றால் பாட்டை கேள் என்று அவனை கட்டாயப்படுத்துவீர்களா... அது போலத்தான் எனக்கும் இருக்கிறது ஒரு அணியை ஆதரவு செய் என்று கட்டாயப்படுத்துவது..





சரி சின்னவயதில் கிரிக்கெட் பார்க்க ஆரம்பிக்கும் போது இப்படி அணிகள் இருக்கும் என்றோ அதற்கு ஆதரவு அளிப்பதால் பல கருமங்கள் நேரும் என்றோ யாராவது உணர்வார்களா.. சின்ன வயது கிரிக்கெட் அனுபவம் தனிப்பட்ட நபர்களைப்பார்ப்பதால் கட்டியெழுப்பப்படுகிறது.. எனக்கு அது சச்சின்.. சச்சின் விளையாடாமல் போட்டிகளை நான் பார்ப்பதில்லை... சச்சின் ஓய்வுக்கு பின்னர் கிரிக்கெட் பார்ப்பேனா என்றே எனக்கு சந்தேகம்.. எனக்கு கிரிக்கெட் என்றால் சச்சின்தான்.. அதன் படி இரு விடயங்கள் இந்திய அணி தோற்றால் அல்லது சச்சின் ஓட்டமெடுக்காமல் ஆட்டமிலந்தால் தயவு செய்து ஏதோ நான்தான் பயிற்சியாளர் போல என்னிடம் கேள்வி கேட்கவேண்டாம்.. உண்மையான ரசிகன் கவலைப்படுவான்.. என்னை மாதிரி ரசிகன் தோற்கும் போதும் தனக்கு பிடித்த அணியை ரசிப்பான்.. விஜய் படம் சொதப்பலா வந்தாலும் விஜய் ரசிகனுக்கு அது திருவிழாதான்.. அடுத்த விடயம் கடந்த வருடத்தில் எனது வாழ்நாள் கனவுகளில் இரண்டு நிறைவேறின அதில் ஒன்று சச்சினை நேரில் கண்டு கை குலுக்கியது.. வேறு எங்கும் இல்லை பி.சரவணமுத்து மைதானத்தில்..

இதற்கும் மேல் உங்கள் கேவல வக்கிர அரசியலை எனது பொழுதுபோக்கிற்குள் புகுத்தினால்... நான் ஒரு இலங்கை ஆதரவாளன்தான் ஆளை விடுங்கப்பா.. என்று கூறிக்கொண்டு ஒதுங்கி விடுவேன்... ஏனென்றால் பொழுதுபோக்கே ஒரு ஆளுக்கு தலையிடியா வந்திடக்கூடாது..

அன்புடன்
மதுரகன்

பி.கு - இதைத் தொடர்பதிவாக தொடர விரும்பும் நண்பர்கள் தொடரலாம் நான் யாரையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை.. ஆனால் எனக்குத்தெரியும் என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள்..


7 Response to "என்னை விட்டுடுங்கப்பா நான் ஒரு Srilanka Supporter"

.
gravatar
தர்ஷன் Says....

நான் இலங்கை ரசிகன்
ம்ம் இருந்தாலும் நீங்கள் சொன்ன காரணத்தை(சச்சின்) ஏற்கிறேன். ஆனால் பல பேர் நாம் தமிழர்கள் என்பதால் இந்தியாவை ஆதரிப்போம் என இதில் அரசியல் செய்ததை சிறுவயதில் இருந்தே பார்த்து வருவதால் இந்திய அணி என்றாலே வெறுப்பாய் போய் விட்டது.
உங்களுக்கு சச்சின் போலத்தான் எனக்கு அரவிந்த

.
gravatar
யோ வொய்ஸ் (யோகா) Says....

தர்ஷனின் கருத்துதான் எனது கருத்தும், என்னை சுற்றி உள்ள தமிழர்கள் இலங்கை எல்லா போட்டிகளிலும் தோற்க வேண்டும் எனவும் இந்தியா எல்லா போட்டிகளிலும் தோற்க வேண்டும் எனவும் எண்ணுபவர்கள் அதிகமாக என்னை சுற்றி இருந்ததால் நான் இலங்கை அணியின் ஆதரவாளனாகியிருக்கிறேன் என நினைக்கிறேன்.

.
gravatar
பெயரில்லா Says....

வணக்கம்ணா நானும் உங்களை போல தான் ஒரு இந்திய அணி ரசிகன்.
அனேகமாக ரஜனி ரசிகர்களுக்கு கமலை பிடிக்காது அஜித் ரசிகர்களுக்கு விஜயை பிடிக்காது அதே போல தான் இலங்கை ரசிகர்களுக்கும் இந்தியாவை பிடிக்காது..

.
gravatar
பெயரில்லா Says....

http://nekalvukal.blogspot.com/2011/01/blog-post_23.html
அரசியல் தான் காரணம் என்பது மிக மிக குறைவுதான்..

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...