திங்கள், 8 மார்ச், 2010

பண்டாரவன்னியன் நினைவு நடுகல் அழிப்பு

Posted on பிற்பகல் 7:52 by செல்வராஜா மதுரகன்

பகைவரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டி தமிழர் வீரத்திற்கு அடையாளமாக திகழ்ந்த மாவீரன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நடுகல்லை இலங்கை இராணுவம் மிலேச்சத்தனமாக அழித்துள்ளதாக Tamilmedia இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 
ஒரு மனிதனுக்கு அவனது வாரிசுகள் நடுகல் எழுப்பலாம், ரசிகர்கள் நண்பர்கள் ஏன் பெற்றோர் கூட எழுப்பலாம், ஆனால் ஒரு மனிதனுக்கு அவனது எதிரியே நடுகல் எழுப்பினான் என்றால் அவன் பெருமையை என்னவென்பது. வன்னியன் மன்னர்களின் கடைசி மன்னனான பண்டார வன்னியன் பனங்காமத்தினை தலை நகராக கொண்டு வன்னியை ஆண்டான். ஒல்லாந்தருடைய இறுதிக்கட்டத்திலும் ஆங்கிலேயர் வந்தபின் அவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த அவன் வெல்லப்பட முடியாத மாவீரனாக திகழ்ந்தான். 

பலமுறை படை எடுத்தும்  வெல்லப்படமுடியாத அவனை நிறைவில் மன்னர் ஆனையிறவு திருகோணமலை என மும்முனையிலும் இருந்து படை எடுத்து வந்து வென்றனர். அப்படி வென்ற தளபதி வொன் டிரிபெர்க், பண்டாரவன்னியனின் வீரத்தினைப் பாராட்டியும் தனது பெருமையைப் பறைசாற்றவும். அவனுக்கு யுத்தம் நடந்த இடத்திலே நடுகல் ஒன்று அமைத்தான். அதிலே 1803 ம் ஆண்டு ஆசுஸ்ட் மாதம் 31 ம் திகதி இந்த இடத்திலே தன்னால் பண்டார வவ்னியன்(அவர்கள் அப்படிதான் வன்னியன் என்பதை உச்சரித்தார்கள்) தோற்கடிக்கப்பட்டதாக எழுதினான். 
இராச்சியம் இழந்த பின்னரும் மீண்டும் மீண்டும் போர் தொடுத்த பண்டாரவன்னியன் போரில் விழுப்புண் பெற்று 1811ம் ஆண்டளவில் மரணித்தான். இலங்கை அரசு கூட அவனை தேசிய வீரனாக அறிவித்து இருந்த்த நிலையில். அவனது நினைவாக 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக காணப்பட்டு, அனைத்து தமிழர்களாலும் புனிதப் பிரதேசமாக மதிக்கப்பட்ட அந்த நடுகல்லை காட்டுமிராண்டித்தனமாக இலங்கை இராணுவம் அளித்துள்ளமை. ரோசமுள்ள எந்த ஒரு தமிழனாலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இடுகை ஒன்று இடுவதைத் தவிர என்ன செய்துவிட முடியும் என்னால். அழிந்தது அழிந்தது தானே...      

இது, 
வவுனியா கச்சேரியின் முன்பாக உள்ள பண்டாரவன்னியன் சிலை. இயலாமையுடன் மிகுந்த கோபத்துடன், 
மதுரகன் 


3 Response to "பண்டாரவன்னியன் நினைவு நடுகல் அழிப்பு"

.
gravatar
archchana Says....

அவனது நினைவாக 2 நூற்றாண்டுகளுக்கு மேலாக காணப்பட்டு, அனைத்து தமிழர்களாலும் புனிதப் பிரதேசமாக மதிக்கப்பட்ட அந்த நடுகல்லை காட்டுமிராண்டித்தனமாக இலங்கை இராணுவம் அளித்துள்ளமை. ரோசமுள்ள எந்த ஒரு தமிழனாலும் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. ஆனால் இடுகை ஒன்று என்ன செய்யமுடியும் எம்மால் ...............................
(வன்னியில் ஒரு இடமும் மண் இல்லாமல் கல்லறைகளை கிண்டி மண் எடுத்து புதிய வீதி போடுகிறார்கள். இதற்குகூட என்ன செய்யமுடியும் எம்மால்.......... ) தவிர என்ன செய்துவிட முடியும் என்னால். அழிந்தது அழிந்தது தானே...//

.
gravatar
ராகவன் Says....

தமிழருக்கும் தமிழினத்துக்கும் எதிராக எத்தனையோ செயற்பாடுகள் சிங்கள இனவெறிக் கும்பலால் செயற்படுத்தப்பட்டுள்ளது/செயற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறான விடையங்களுக்கு இதைவிட முக்கியத்துவம் கொடுத்தால் சிறந்தது.எனினும் தமிழர் வரலாறு மீதான ஆர்வத்தினை பாராட்டுகிறேன்.
சுருக்கமாக கூறின் மண்டைகளை உடைக்க பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கல் கல் உடைத்தற்கு கதறியழ தேவையில்லை.

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...