புதன், 17 மார்ச், 2010

கிரிக்கெட் தொடர்பதிவு முன்னோட்டம்

Posted on பிற்பகல் 7:16 by செல்வராஜா மதுரகன்

பலர் கிரிக்கெட் தொடர்பதிவு போட்ட போது நானும் பார்த்தேன், என்னை யார் அழைக்கப்போகிறார்கள் என்று, அன்பிற்காக என்று சதீஷ் அழைத்த பிறகு நேரப்பற்றாக்குறையால் சில நாட்கள் தாமதித்து இன்று தருகிறேன்.   
எனக்கு கிரிக்கெட் விளையாட தெரியும் ஆனால் நான் ஒரு batsman உம் இல்லை baller உம் இல்லை keeper உம் இல்லை. அப்பா என்ன என்று கேட்காதீர்கள் எல்லாம் தெரியும் ஆனா எல்லாம் சொதப்பல் ஆனாலும் ஆர்வம் விடாததால் இன்றுவரை மைதானத்தில் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.  சிறு வயதிகிருந்தே பெண்கள் அதிகம் இருந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அதனால் பாடசாலை வந்து ஓரளவு வளரும் வரை எனது விளையாட்டெல்லாம் தாயம், கெந்திக்கோடுதான்(தெரியாதவர்கள் அருகிலுள்ள சிறு பெண்களிடம் கேட்டுக்கொள்க). ஆகவே விளையாடி அனுபவம் இல்லை, பக்கத்திலேயே மைதானம் இருந்தும் கேட்ட சகவாசம் வந்துவிடும் என அங்கு போகவும் அனுமதி இல்லை. 
ஆனாலும் ஓரளவு சிறு வயதிலேயே தந்தையுடன் அமர்ந்து கிரிக்கெட் தொலைக்காட்சியில் பார்க்க பழகிக்கொண்டேன். முற்றாக புரிந்து நான் பார்த்த முதல் போட்டி எது என்று நினைவுக்கு வரவில்லை. ஆனாலும் எனக்கு 9 வயது இருக்கும் போது நடந்த உலகக்கிண்ணம் 1996 போட்டிகளில் ஒன்றுதான் என்பது உறுதி. 
முதல் அனுபவங்கள் எப்படியும் மறக்க இயலாதவை தானே அதுதான் எனக்கும் நடந்தது. சச்சின் அந்த உலககின்னப்போண்டியில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். பெயர் கூட தெரியாது அப்பா சொன்ன பெயரை காதில் வாங்கி எனக்கேற்றபடி செந்தில்காந்த் என்று அழைத்துக்கொண்டேன். சச்சின் எப்போது பிடித்ததோ அன்று முதல் தான் கிரிக்கெட் மிகவும் பிடித்தது. இன்று சச்சின் விளையாடாவிட்டால் நான் போட்டிகள் பார்ப்பதே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு ஒரு சச்சின் பைத்தியம். சச்சின் பிடித்ததால் இந்திய அணியும் பிடித்தது. அப்படியே அதில் விளையாடிய சிலரும்.   

அடுத்தது இந்திய அணியை பிடித்துக் கொண்டதால் நான் பட்ட துன்பங்கள் ஏராளம் தேசத்துரோகி என்றார்கள் சிலர், அதை விட பெரும்பான்பை இன நண்பர்கள் சிலர் தீவிரவாதி என்றார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு பதில் நான் ஒரு இந்து என்ற படியால் சிவனை வலி படுகிறேன் அது என் கடமை. ஆனால் கிரிக்கெட் என் பொழுதுபோக்கு அங்கு யார் என்னை மகிழ்விக்கிறாரோ அவரை ஆதரிப்பதில் என்ன தவறு. என்னை திட்டியவர்கள் கூட பிடித்த நடிகர், இசை அமைப்பாளர், கவிஞர் என்றவுடன் உடனே எண்கள் நாட்டுக்காரரையா சொல்கின்றனர். இல்லையே ??
ஆங்கிலத்தில் சொல்வதானால் Cricket is an Entertainment, Ill like the Team or Person which/who mostly entertains me. இதைவிட இங்கு அரசியல் கலக்கவும் தேசப்பற்றைக் காட்டவும் எதுவும் இல்லை. பிடிக்குதா பார் இல்லாடி எழும்பிப் போ அதுதான் எனது கொள்கை. சரி இதிலே நிறைய எழுதி விட்டதால் தொடர் பதிவை தனிப்பதிவாக தருகிறேன். 

மதுரகன்      
  


5 Response to "கிரிக்கெட் தொடர்பதிவு முன்னோட்டம்"

.
gravatar
NimaleN SivapalaN Says....

மதுரகன், நீ குறிப்பிட்டது போலவே நானும் நிறைய பட்டங்களை வாங்கிகட்டி விட்டேன்..!! என்னை போட்டு அவர்கள் படுத்தாத பாடா.. கிரிக்கட்டை நானும் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே எடுத்திருந்தேன்.. எப்போது அவர்கள் எனக்கு தீவிரவாதி என்று பட்டம் சூட்டினார்களோ... அன்றிலிருந்து நானும் தீவிரவாதி போல் ஆகிவிட்டேன் (வேறு ஒன்றிலுமில்ல.. கிரிக்கட்டை பற்றி கதைப்பதில்)..!! Chak de India ..!!

.
gravatar
முகிலன் Says....

சரி சரி விடுங்க மதுரகன்..

அவங்க எதை தேசத்துரோகம்னு சொல்றாங்கன்னு தெரியலை..

ரெண்டே ரெண்டு இனம் இருக்கிற இந்த நாட்டுல இதுவரை எத்தனை தமிழர்கள் தேசிய அணியில விளையாடி இருக்காங்க? தமிழர்களுக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாதா?

இந்த லிங்க் பாருங்க

http://www.cricinfo.com/srilankadomestic/engine/current/match/367554.html

அணி பேரு தமிழ் யூனியன் கிரிக்கெட் க்ளப்பாம் இந்த அணியில எத்தனை தமிழர்கள் இருக்காங்க?

.
gravatar
Sangkavi Says....

//நான் ஒரு batsman உம் இல்லை baller உம் இல்லை keeper உம் இல்லை. அப்பா என்ன என்று கேட்காதீர்கள் எல்லாம் தெரியும் ஆனா எல்லாம் சொதப்பல் ஆனாலும் ஆர்வம் விடாததால் இன்றுவரை மைதானத்தில் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறேன்.//

எதுவுமே தெரியாம எப்படிங்க உள்ள விட்டாங்க...

 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...