ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

காந்தி - மண்டேலா - பொன்சேகா ??

ஓரிரு நாட்களுக்கு முன்னர் என்னை அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வு இது நேரம் கிடைக்காததால் சற்று தாமதமாக இன்று தருகிறேன். பொன்சேகா வேட்பு மனுவில் கையொப்பம் இட்ட அன்று அவரது மனைவி திருமதி. அனோமா பொன்சேகா ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றினார் அதிலே அவர் கூறியது என்னவென்றால், "இது ஒரு புரட்சிகரமான நிகழ்வு, இலங்கை வரலாற்றில் முதல் நிகழ்வாக கூட இருக்கலாம் எனது கணவர் சிறையிலே இருந்து வேட்பு மனுவிலே கையொப்பம் இட்டார், இதற்கு முன்னர் மகாத்மா காந்தி, நேரு, நெல்சன் மண்டேலா போன்றோருக்கு இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நான் கேள்விப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.
இங்கு அவர் போன்செகவுடன் ஒப்பிட எடுத்துக்கொண்ட நபர்களினைப் பார்த்ததுமே நான் திடுக்கிட்டு விட்டேன் அன்று இரவு கஷ்டப்பட்டுதான் தூக்கமே வந்தது. திருமதி. அனோமா அவர்களே நீங்கள் உங்கள் கணவருடன் ஒப்பிட வேறு ஆட்களே கிடைக்கவில்லையா. அகிம்சைக்கும் அமைதிக்கும் பெயர் பெற்று உலகத்தில் பலரால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் அவர்களை, கொடுமையான ஒரு யுத்தத்தை நடாத்தி பல்லாயிரக் கணக்கானோர் இறக்க காரணமாக இருந்த உங்கள் கணவர் பொன்சேகாவுடன் ஒப்பிட உங்களுக்கு மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது. உங்கள் அறியாமையை நினைத்து அனுதாபம் கொள்வதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை எனக்கு. 

மதுரகன்     

வியாழன், 25 பிப்ரவரி, 2010

கமல் வேடத்தில் ப்ரித்விராஜ்

பெருகிவரும் ரீமேக் மோகத்தின் ஒரு அங்கம்தான் இதுவும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளை அதிகளவு பீடித்திருந்த ரீமேக் மோகம் இப்போது தரமான சினிமாக்களை உருவாக்குவதில் இந்தியாவிலேயே  முன்னோடியாக திகழ்ந்து கொண்டிருக்கும்  மலையாள சினிமாவையும் பிடித்து விட்டது.  இந்த வகையில் 1985 வது ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த பெருவெற்றித் திரைப்பமான காக்கிச்சட்டை மீள் உருவாக்கம் செய்யப்பவுள்ளது. இந்த திரைப்படத்தில் கமல் வேடத்தில் நடிகர் ப்ரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தெரிகின்றது ஆனால் அதற்கு நிகரான வில்லன் வேடத்தில் அதாவது சத்யராஜ் நடித்த கதாபத்திரத்தில் நடிப்பது யார் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. அத்துடன் கமல் நடித்த வேடத்தில் நடிக்கவுள்ளமை ப்ரித்விராஜின் திறமைக்கு சவாலாகவும் அவருக்கு பெயர் வாங்கித் தரும் வாய்ப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் - indiaglitz.com   

சச்சின் - சில பொறாமையின் வெளிப்பாடுகள்

 வரலாறுகள் எத்தனையோ பேரை உருவாக்கி உள்ளன, எத்தனையோ பேர் வரலாற்றை உருவாக்கி உள்ளனர், ஆனால் சில பேர்தான் வரலாறு ஆகின்றனர் சச்சின் அத்தகைய ஒருவர், அவர் எடுத்துப்படிக்க வேண்டிய ஒரு வரலாறு. அத்தகைய ஒரு சாதனை நாயகன் நேற்று நடாத்திய மாபெரும் சாதனையை சிலர் கீழ்த்தரமாக விமர்சித்தால் அது பொறாமையின் வெளிப்பாடு அன்றி வேறொன்றில்லை.

புதன், 24 பிப்ரவரி, 2010

சச்சின் 200 அம்மாமாமாமாமாமாமா....டியோவ்

வேட்டையாடு விளையாடு படத்தில் ஒரு பாடல் வரும் "கற்க கற்க" என்று அதிலே ஒரு வரி "கண் ஆயிரம் கை ஆயிரம் என தேகம் கொள்ள இப்பூமியில் நடமாடிடும் இவன் தெய்வம் அல்ல" என்பது அதுதான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றது. அதாவது மனித இயலுமை எல்லையின் விளிம்பில் நின்று சாதனை படைக்கின்ற ஆற்றல் ஒரு சிலருக்கதான் வாய்க்கும். அவர்களில் ஒருவர்தான் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தம் சச்சின் சச்சின் சச்சின் ....    

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பெரிய தலைக்கும், தலைக்கும் ரெட் நோட்டீஸ்

தனக்கு வந்த பிரச்சினைகளால நொந்து போயிருந்த அஜித் திட்டம் போட்டோ போடாமலோ, சொல்லக்கூடாத இடத்தில வச்சு சொல்லக்கூடாத நபரிடம் சொல்லிவைத்தார். அதைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்ட ரஜினியும் இருக்கக்கூடாத இடத்தில இருக்கிறோம் என்பதையும் மறந்து எழுந்து நின்று கை தட்டி விட்டார். இப்ப அங்கங்க மாறி மாறி தட்டிக்கொண்டு இருக்கிறார்கள் அவரவர் வீடுகளை.

சனி, 20 பிப்ரவரி, 2010

சில வார்த்தைகள்

எனது பதிவினைத் தொடர்ந்தது வாசித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். வலைப்பதிவை ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள்ளாகவே கணிசமான அளவு வாசகர்களை பெற்று விட்டது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. மேலும் இது பற்றிய தொழிநுட்ப அறிவினை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறிந்து கொண்டிருப்பதால் தொழிநுட்ப விசயங்களில் நான் சர்ருப்பின்னே நிற்கலாம் ஆனாலும் விரைவில் அந்த இடைவெளியை பூர்த்தி செய்வேன்.
அடுத்து பலர் கேட்டுகொண்டதுக்கு இணங்க கருத்துரை இடுவதில் ஏற்படுத்தி இருந்த்த கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளேன். அடுத்து பரீட்சை நெருங்குவதால் இருவாரங்களுக்கு பெரிதாக இடுகைகளை இடமுடியாது எப்படி என்றாலும் சிறிய இடுகையாவது போட்டு விடுவேன். நிறைய இடுகைகள் எழுத நேரமின்றி தள்ளிப் போய்க்கொண்டிருக்கின்றன  பார்ப்போம் நேரம் கிடைக்கும் போது அனைத்தையும் முடித்து விடுகிறேன்.

உங்கள்
மதுரகன்

நண்பன் அகிலனின் காதலர்தினச் சிறப்புக்கவிதைகள்


நண்பன் நடேசன் அகிலன் மருத்துவ பீடத்தில் எமது அணி மாணவன். காரையம்சன் என்ற புனைபெயரில் கவிதைகளை தரும் அவர் களமிறங்கி விட்டாலே எமது பீட கவியரங்குகள் களை கட்டும். காதலர் தினத்தை முன்னிடு அவர் எழுதி எமது பீட அறிவித்தல் பலகையிலும் அவரது மூஞ்சிப்புத்தகத்திலும் இட்ட கவிதைகளின் ஒரு பங்கு இங்கே அவரின் அனுமதியுடன்...
காதலர்தின சிறப்பு குறுங்கவிதைகள் 

காதலே!
இந்த ரோஜாப்பூவை பிடுங்கும்போது
ஒரு கண்டிப்பான உத்தரவு பிறந்தது!
இம்முறையும்
இதை கொடுக்க முடியாது போனால்
இனிமேல் பூக்க மாட்டேன் என்று
அதனால்தானேனும் வாங்கிக்கொள்…

*****************

சனி, 13 பிப்ரவரி, 2010

காதலர்தினச் சிறப்புக்கவிதை

காலங்களால் பிணைப்புகளால் ஆழத்தினால் நீண்டு கிடக்கின்ற காதலுக்கான என்னுடைய நீண்ட ஒரு காதல் சுவடு.....


நீயும் நானும் எமக்குள்ளும்

அடுத்தடுத்த மரங்களில் மரங்களில் மழைக்காக ஒதுங்கி நின்று
முகம் பார்த்துப் புன்னகைக்கும் விழிகளில் ஆரம்பித்து
கடற்கரையோர ஒற்றைக்குடைக்குள் முடங்கிப்போகாத
எமது காதல்.........

மழைக்கால மேகம் மறைத்த நட்சத்திரங்களுக்குள்
மின்னிக்கொண்டிருந்த உன் புன்னகை,
சாலையோர மின் விளக்குகளாய் என்னைத்
தொடர்ந்து கொண்டிருக்க...

வெட்கத்தை வார்த்தைகளால் கூட வெளிப்படுத்த
முடியும் என்று எனக்கு உணர்த்திச்சென்ற
உரையாடல்கள்

இரவுகளில் விழித்துக்கொண்டும் ஒருவரை ஒருவர்
நினைத்துக்கொண்டும், இடையிடையே இருமிக்கொண்டு, தலையணைக்குள்ளிருந்த புகைப்படத்தில் முகம் தடவி
இருட்டினுள் இதழ் பதித்து,
அதிகாலை அழைப்பெடுத்து வாய்திறக்காமலே துண்டித்து
அருகிலே இருப்பதுபோல் அடிக்கடி பேசிக்கொண்டும்
பாவனை செய்து கொண்டும், சராசரியை விட
அதிகமாகவே கிடைக்கிறது உன் அன்பு எனக்கு....

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

காதலி

நான் உன்னை முதன்முறை பார்த்தேன்
உன்முகம் மொட்டுக்களுக்கு மலர்வதைக்
கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
சட்டென்று என் பக்கம் திரும்பினாய்
பூக்களால் கூட பரிசீலிக்கப்படாத நாணம்
உன்முகத்தில் தெரிந்தது...

நீ என்னை ஒருமுறை உற்று நோக்கியதுமே
என் அறையின் ஜன்னலோரப் பூந்தோட்டத்தில்
அதுவரை நிலைத்திருந்த கார்காலம் அகன்றது
என் மலர்வனங்கலெல்லாம் வசந்தகாலத்தை
சூடிக்கொண்டன...

அங்கு
உன்பார்வை ஒவ்வொருமுறை என்னைத்
தீண்டும்போதும் ஒவ்வொரு தளிர்களிலும்
மொட்டுக்கள் கருக்கொண்டன...
உன்சுவாசத்தின் வெம்மை என் இதயத்தை
குளிர்விக்கும் தருணங்களிலெல்லாம்
மகரந்தங்கள் சுகந்தம் பெற்றன...

உன் உதடுகளின் அசைவுகள் என்
உள்ளுணர்வுகளை உரக்கும் போதெல்லாம்
தென்றலில் இதம் கூடியது...
நீ முதன்முறை என்னைப்பார்த்து
புன்னகைத்தபோது என் தோட்டப்பூக்கள்
பூப்பெய்தின,... உன்னை நுகருவதற்காய்...

நான் உன் ஸ்பரிசங்களுக்காய் காத்துக்கிடந்தபோது
நீயும் நானும் மட்டுமே உள்ள
எம் உலகமே பனியால் உறைந்தது...
உன்னால் உயிர்பெற்றெழ....

மதுரகன் 

யதார்த்தம்

அழகான பெண்களை விடவும் சிலிர்ப்பூட்டும் கவிதைகளே என்னை ஆழமாகப்பாதிக்கின்றன......
 (இதை வாசிப்பவர் ஒரு அழகான பெண்ணாக இருந்தால் என் மேல் கோபம் கொள்ள வேண்டாம்)

மதுரகன்   


அசல் - தல மயம் (தலட நடை போல வருமா???)


தல அஜித்தின் தீவிர ரசிகனான நான் எப்படியாது முதற்காட்சி(1st Show) பார்த்துவிட வேண்டும் என்று அசல் வெளியீடு அறிவிக்கப்பட்ட நாள் முதலாகவே ஆர்வமாக இருந்தேன். வழக்கமாக படம் வெளியாவதற்கு முதல் நாள் இரவே முன்னோட்ட (Preview) காட்சி காண்பிப்பது வழக்கம். எனவே 4ம் திகதி இரவே பார்த்துவிடுவது என்ற முடிவுடன் இருந்த எனக்கு சுதந்திர தினத்தன்று படமாளிகைகள் (அதான் தியேட்டர்) விடுமுறை என்று கருத்துக்கூறி காலையே எரிச்சலூட்டினான் நண்பன் ஒருவன். இருந்தாலும் போய்த்தான் பார்ப்போமே என்று பொழுதுபோகாமால் தவித்துக்கொண்டிருந்த நண்பா் ஒருவரையும் கூட்டிக்கொண்டு (அவருக்கு அஜித்தே பிடிக்காது என்பது வேறுகதை) சினிசிட்டிக்குப் போனால் அங்கே கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்தது. தல கட்டவுட்டுக்கள் வேறு மேலே ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
படம் பார்க்கப்போன எனக்கு முதலாவது ஆச்சரியம் அங்கு வந்திருந்த பெண்களின் எண்ணிக்கை. அளவு கணக்கற்ற கூட்டத்திற்கிடையே எத்தனையோ முதற்காட்சிகள் பார்த்திருந்தாலும் இந்த அளவிற்கு பெண் ரசிகைகள் முதற்காட்சிக்கு திரண்டு வந்திருந்தது அன்றுதால் முதல் அனுபவம் எனக்கு. மனதிற்குள் தலையை வாழ்த்திக் கொண்டு ஒரு வழியாக அனுமதிச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்து ஒரு ஓரமாக இருந்த ஆசனத்தை இலக்கு வைத்துச் சென்று அமா்ந்தோம்.

கோவா - என்ன கொடுமை சார் இது ??


வெங்கட்பிரபு மற்றும் அவரது குழுவில் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் படம் பார்க்கச் சென்றேன். ஏற்கனவே சென்னை600028 மற்றும் சரோஜா போன்ற படங்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்தன.  நீண்ட கனமான கதை ஒன்றிற்கு திரைக்கதை எழுதி திரைப்படமாக்குபவர்களின் மத்தியில் ஒரு சம்பவம் ஒன்றிற்கு விறுவிறுப்பான சுவாரசியமான திரைக்கதை ஒன்றை வழங்குவதன் மூலம் ரசிகர்களை வெற்றிகொள்ள முடியுமெனவும் காட்டியிருந்தார். 
கோவா படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இன் தயாரிப்பில் யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் வெங்கட் பிரபு எழுதி இயக்க வெளியானது. 

படத்தில் பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தது. முக்கிய வேடங்களில் ஜெய், வைபவ், ப்றேம்ஜிஅமரன், அர்விந்த் ஆகாஷ், சம்பத், பியா, சினேகா மற்றும் ஒரு பெயர் தெரியாத ஆஸ்திரேலிய மாடல் அழகி ஆகியோர் நடித்து இருந்தனர். இதைவிட விஜயகுமார், சந்திரசேகர், ஆனந்தராஜ் வகையறாக்களும் ஆங்காங்கே ஊடுருவி இருந்தனர். பிரசன்னா இரண்டு இடங்களில் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு போனார். கடைசிக்கட்டத்தில் திடுக்கிடும்படி மன்மதன் சிம்பு ஒரு இடத்திலும் புன்னகையை மட்டுமே பேசிக்கொண்டு நயன்தாரா ஒரு இடத்திலும் வந்து போறாங்கோ. 
படத்தில் எனக்கு பிடித்தவிடயங்கள் முதல் என்ற ஒழுங்கில் பிடிக்காத விடயங்கள் வரைக்கும் சொல்லிக்கொண்டு போகிறேன்.
 

லேபிள்கள்

நான் பார்த்ததிலே...